"சரித்தான்" என்கிறாகள் உழைக்கும் மக்கள்!
ஆம் இன்று 28/12/12 காலை மமக மது ஒழிப்பு பரப்புரை யுத்ததை உழைக்கும் மக்கள் கூடும் இடமான அதிரை சேர்மன்வாடியில் நடத்தியது.
மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றிய பிரச்சார பாடல்கள், உரைகள், கோஷங்கள்,துண்டு பிரசுர வினியோகம் என தனது பரப்புரை களத்தை அமைத்தது.
கொட்டும் மழையிலும் மக்கள் அமைதியாக பிரச்சாராத்திற்கு செவி கொடுத்தனர். பாடல்களையும் உரைகளையும் கேட்ட சில பெண்களின் கண்கள் கசிவதை காணமுடிந்ததது.
அவர்களிடம் பேசியபோது" தனது கனவன் கடும் உழைப்பாளி நானும் தினம் கட்டுமான வேலைக்கு செல்கிறேன். 25 வருடமாக இருவரும் உழைத்தும் இதுவரை ஒருகுண்டுமணி அளவுக்கூட சேர்க்கவில்லை. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது அதற்கு கல்யாண வயதும் வந்துவிட்டது. எம்புருஷன் குடித்தே குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். இதுப்போன்ற பிரச்சாரம் அவசியம். என் குடும்பம் சீரழிந்தது போல் வேறு எந்த குடும்பமும் சீரழியக்கூடாது" என்று விசும்பினார்.
அதிரை மமகவின் இந்த பரப்புரை யுத்தம் மக்கள் கூடும் பழஞ்செட்டி தெரு முக்கம், பேருந்து நிலையம், பழைய அஞ்சல் நிலைய முக்கம் என அதிரையின் பலப்பகுதிகளுக்கும் பரப்புரையை எடுத்துச் சென்றனர்.
இன்னும் தொடர்கிறது அதிரை மமகவின் பரப்புரையுத்தம்!
இதில் இணைந்துக்கொள்ள விரும்புவோர் அதிரை தமுமுக, மமக அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்