Breaking News
recent

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா !? - நூல் வெளியிடு



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மறுக்கப்படும் நீதிக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டுவதிலும் ஓர் இறை நம்பிக்கையாளனின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் தெள்ளத் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. அவ்வழியில் அதிரைநிருபர் வலைத்தளத்தில் எங்கள் மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி M.Com., அவர்களால் ஆய்வு செய்து எழுதப்பட்ட "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" என்ற தொடர் வெற்றிகரமாக வெளியானதை அனைவரும் நன்கு அறிவீர்கள், அல்ஹம்துலில்லாஹ் !

ஏற்கனவே அறிவித்தபடி, நூல் வடிவம் பெற்ற தொடர் மிகவும் எளிமையாக நாளை (09-டிசம்பர்-2012) வெளியிட இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !


நாள்: 09-Dec-2012

நேரம் : மாலை 4:15 மணி முதல் 5:30 மணி வரை. 

இடம் : அதிரை இ. சி. ஆர் ரோடு , இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் இல்லம்.

தலைமை : அதிரை அஹமது B.A., அதிரை தாருத் தவ்ஹீத் அமீர்

வரவேற்புரை :  M. தாஜுதீன் M.B.A., அதிரைநிருபர் அமீர்

நூல் அறிமுகம் : தீன் முகமது B.Sc .B.G.L,

வெளியீட்டு உரை   : ஜமீல் M.ஸாலிஹ், அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர்

முதல் பிரதி பெறுபவர்எஸ். முகமது பாரூக் 

வாழ்த்துரை : M.L. அஷ்ரப் அலி M.A.B.L

நன்றி மற்றும்  ஏற்புரை இப்ராஹீம் அன்சாரி M.Com., நூல் ஆசிரியர்

விருந்தினர்களாக முன்னால் ஆசிரியர்கள், நண்பர்கள், அதிரை வலைப்பூக்களின் பங்களிப்பாளார்கள் மற்றும் உறவினர்கள்.

மிகக் குறுகிய காலக் கெடுவுக்குள் நடத்த வேண்டியிருப்பதாலும், புத்தக வெளியீடு மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையின் பேரிலும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படிக்கு,

அதிரைநிருபர் பதிப்பகம்
ஷப்னம் காம்ப்ளெக்ஸ் - முதல்மாடி
கா.மு.கல்லூரி எதிர்புரம்
கிழக்கு கடற்கரைச் சாலை
அதிராம்பட்டினம் - 614701
தஞ்சாவூர் மாவட்டம்
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. அப்பாவை நான் கோலம்பூரில் பார்த்தபோது புஸ்தகங்களுக்கு நடுவே நின்று கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு எந்த புஸ்தகம் எங்கே உள்ளது என்று மிக துல்லியமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் அவர்களின் வாழ்க்கையின் பெரும் பகுதி புஸ்தகங்களுடன் தான் கழிந்தது இதனால்தான் என்னமோ நமக்கும் புஸ் தகங்களுக்கும் ரொம்ப நெருக்கம். புஸ்தகம் கூடவே பிறந்து வழர்ந்த நாம் உங்கள் மூலமாக இன்னும் பல புஸ்தகங்களை அதிரைநிருபர் பதிப்பகம் மூலம் வெளி இட இறைவன் துணை இருப்பனாக

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும். இது சமத்துவம் படைக்கவும் சரித்திரம் படைக்கவும் கூடிய நூல் என்றாலும் மாற்று மத சகோதர்களை நம் இயற்கை மார்க்கத்தில் நுழய அழைக்கும் வாயில் . இன்னூல் பலரால் வாசிக்கப்பட அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.