Breaking News
recent

வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு!


வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் வரைவு பட்டியல் அக்டோபர் 10ல் வெளியிடப்பட்டது. பின் 1.1.2013 அடிப்படையில், வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன. மனுக்கள் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர்களின் செல்போன் எண்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி இப்போது நடக்கிறது. இதையடுத்து, வரும் காலங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், வாக்காளர் சேர்க்கை, நீக்கம், வரைவு பட்டியல் வெளியீடு போன்றவை மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் ஆக வந்து சேரும். அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
புது உத்தரவு கடந்த காலங்களில் வாக்குப்பதிவுக்கு முதல் நாள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டில் இளஞ்சிவப்பு நிற டிரிப் சீல் சுற்றப்படும். அந்த சீலில் வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்பு அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து இடுவார். அதன்பிறகே வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படும்.
தற்போது அந்த சீலில் தேர்தல் நடத்தும் அதிகாரியுடன், அந்த தொகுதியில் நியமிக்கப்படும் தேர்தல் பார்வையாளரும் கையெழுத்திட வேண்டுமென தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிரிப் சீலில் தேர்தல் பார்வையாளரின் கையெழுத்து இல்லாவிட்டால், அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை வாக்குப்பதிவிற்கு பயன்படுத்த கூடாது. அதே போல் வாக்கு எண்ணுகை மையங்களில் டிரிப் சீலில் தேர்தல் பார்வையாளரின் கையெழுத்து உள்ளதை உறுதிப்படுத்திய பிறகே வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.