Breaking News
recent

தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரூ.290 கோடி செலவில் புதிய ரெயில்பாதைக்கு அனுமதி

தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே ரூ.290 கோடி செலவில் புதிய ரெயில்பாதை அமைக்கப்பட இருப்பதாக ரெயில்வே மந்திரி, மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை மந்திரி எஸ்.எஸ். பழனி மாணிக்கத்துக்கு, மத்திய ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது-
 
தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில்பாதை அமைக்க கோரி தாங்கள் நேரிலும், கோரிக்கை மனு மூலமாகவும் பலமுறை தெரிவித்தீர்கள். அதன் பயனாக, தாங்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக தஞ்சை-  பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில் பாதை பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
 
தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே 47.2 கி.மீ, தூரத்திற்கு ரூ.290.05 கோடியில் புதிய ரெயில் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி பாதையை அகல பாதையாக்கும் பணியையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகளை தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இவ்வாறு ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால், மத்திய மந்திரி பழனி மாணிக்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.