Breaking News
recent

viswaroopam full movie


விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தமிழக அரசு இடைக்கால தடை?

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென தமுமுக உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் இன்று தமிழக உள்துறைச் செயலாளரை சந்தித்து இன்று காலை கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இப்படம் திரைப்படம் வெளியானால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் கூறினர்.

முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளித்து விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தைத் திரையிட அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=2977:2013-01-23-15-56-52&catid=58:2009-10-11-12-42-41


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!
தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலி! அல்ஹம்துலி்ல்லாஹ்!
சற்றுமுன்பு விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலியாக இந்த அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி நேரில் வலியுறுத்தினர்.
இந்த திரைப்படம் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வந்த செய்திகளைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்.
இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்தது.
சிலர் இந்த திரைப்படம் வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் கெடும் என்பதைவிட சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதுதான் பிரதான விஷயம் என்பதையும், எவ்வளவுதான் ஜனநாய ரீதியாக போராட்டங்களை நடத்தினாலும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத்தான் அராசங்கம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நமது நிர்வாகிகள் உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடரித்தில் விளக்கினர்.
உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு நன்றி!
சிறுபான்மையினரது கோரிக்கையை ஏற்று அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.
நன்றி:http://www.tntj.net/128377.html

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.