Breaking News
recent

திருச்சி, தஞ்சையில் உள்ள சேவை மையங்களில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் முகாம்கள் 23–ந்தேதி நடத்தப்படுகிறது

திருச்சி, தஞ்சையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் வருகிற 23–ந்தேதி ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சிறப்பு முகாம்

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்காக திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்திலும் (பி.எஸ்.கே), தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்திலும் வருகிற 23–ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. ஹஜ் பயணிகள் வருகிற 20–3–2013 –ந்தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என ஹஜ் கமிட்டி அறிவித்து இருப்பதால் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமுக்கு வரும் ஹஜ் பயணிகள் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணிக்குள் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வந்து விடவேண்டும். ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் பாஸ்போர்ட் எடுப்பதற்கு தேவையான ஆவணங்களுடன் ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்ததற்கான பிரிண்ட் அவுட் நகலுடன் வரவேண்டும். 31–3–2014ல் பாஸ்போர்ட் காலாவதி ஆகும் நிலையில் உள்ள ஹஜ் பயணிகளும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம்.

உதவி மையம்

ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக உதவி மையம் (ஹெல்ப்டெஸ்க்) பாஸ்போர்ட் சேவை மையங்களில் வருகிற 25–ந்தேதி முதல் மார்ச் 20–ந்தேதி வரை செயல்படும். இந்த உதவி மையம் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.