Breaking News
recent

தஞ்சை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை!

தஞ்சை மாவட்டத்தில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆய்வாளர் வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் தொழிலாளர் ஆய்வாளர் இ.வெங்கடேசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

1986–ம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் பிரிவு 3–ன் படி எந்தவொரு தொழிலிலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் பிரிவு 14–ன் படி ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் அளிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.

எனவே 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு தொழிலிலும் வேலைக்கு அமர்த்த வேண்டாம். மேற்படி சட்டப்பிரிவுகளை மீறுவோர் மீது சட்டப்படி வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கைப்படுகிறது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.