Breaking News
recent

இலங்கை அரசை கண்டித்து காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (காணொளி)!!




தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசை கண்டித்தும் இலங்கையில் போரை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும்,தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதங்களும், போராட்டங்களையும் மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்தும்,ராஜபக்சேயை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது ஐக்கிய நாடுகள்  சபைக்கு முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள்..


  • யாழ்பாணத்தில் சிங்களப்படை தாக்கி கைது செய்துள்ள தமிழ் மாணவர்களை உடனே விடுதலை செய்! 
  •  2 லட்சம் ஈழ தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பலை கைது செய் !
  • சூடான் போன்று தமிழ் ஈழத்திற்காக வாக்கெடுப்பு நடத்து! 
  • சுமார் 650 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொலை செய்துள்ள சிங்களப்படை மீது நடவடிக்கை எடு!

இந்த ஆர்பாட்டத்திற்கு 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும்,ஆசிரியர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.





அதிரை குரல்

அதிரை குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.