Breaking News
recent

சென்னை பாரிமுனை பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள்

சென்னை பாரிமுனை பகுதியில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் கொடுமையிலிருந்து பாதுகாத்து கொள்ள பெரும்பாலான மக்கள் குளிர்பான கடைகளை நாடி செல்கின்றனர். இந்தநிலையில் பிராட்வே பஸ் நிலையம் உள்பட அதன் சுற்று பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

குளிர்பானங்கள் பறிமுதல்

அதைத்தொடர்ந்து பிராட்வே பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகளில் உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது குளிர்பான கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்கள், போலி குளிர்பான பாட்டில்கள், தரமற்ற ரேஷ்னா, மோர், தண்ணீர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

தரமற்ற குளிர்பானங்களை இனி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறும்போது, 'காலாவதியான குளிர்பானங்களை குடிப்பதன் மூலம் வாந்தி-பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட உள்ளது. எனவே பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கும்போது, குளிர்பானத்தில் உள்ள தேதியை பார்த்து வாங்க வேண்டும். குளிர்பான கடைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்' என்றனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.