Breaking News
recent

ஜப்பான் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை

ஜப்பான் அரசு, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சர்வதேச மாணவர்கள் ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலைகல்வி படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
ஏப்ரல் 2014 முதல் இவ்வுதவித்தொகை மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும். சிறப்பு பயிற்சி  கல்லூரி (மூன்று ஆண்டுகள்) உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் மூன்றாண்டுகள் படிக்க உதவித்தொகை:
இந்த ஆண்டு முதல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் பயில இந்திய மாணவர்களுக்கு  விலக்கு அளிக்கப்படுகிறது.
சுய கவனிப்பு மற்றும் உணவூட்டவியல், கல்வி மற்றும் நலத்துறை, வியாபாரம், ஆடை வடிவமைத்தல் மற்றும் குடும்ப பொருளாதாரம், கலாச்சாரம்  மற்றும் பொதுக்கல்வி, இதர துறைகள் தொழில்நுட்ப கல்லூரிகள் (நான்கு ஆண்டுகள்)
கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் நான்காண்டுகள் படிக்க உதவித்தொகை:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  (Mechanicale Engineering)
மின் மற்றும் மின்னணு இன்ஜினியரிங் (Electrical and Electronics Engineering)
தகவல் தொலைத்தொடர்பு மற்றும் நெட்வர்க் இன்ஜினியரிங் (Information. Communication & Network Engineering)
மூலப் பொருள் பொறியியல் (Materials Engineering)
கட்டடக்கலை மற்றும் சிவில் இன்ஜினியரிங் (Architecture & Civil Engineering)
கடல் சார்ந்த பொறியியல் (Maritime Engineering)
பிற துறைகள் (Other Fields)
கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் ஐந்தாண்டுகள் படிக்க உதவித்தொகை:
சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் (Social Science and Humanities)  (அ) சட்டம், அரசியல், ஆசிரியரியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பான் மொழி மற்றும் பிற துறைகள்
(ஆ) பொருளாதாரம் மற்றும் வியாபார நிர்வாகம், இயற்கை அறிவியல் (Natural Science) 
இயற்கை அறிவியல் (அ) :- மின் மற்றும் மின்னணு படிப்பு, மெக்கானிக்கல் படிப்புகள், சிவில் இன்ஜினியரிங் மற்றும் கட்டடக்கலை, வேதியியல் சம்பந்தமான படிப்புகள் மற்றும் பிற துறைகள்.
இயற்கை அறிவியல் (ஆ) :- வேளாண்மை படிப்புகள்,சுகாதாரம் சம்பந்தப்பட்ட படிப்புகள் மற்றும் அறிவியில்.
இயற்கை அறிவியல் (இ) :- மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்
தகுதி: விண்ணப்பதாரர்கள் 2 ஏப்ரல் 1992 ஆம் ஆண்டிற்கு பிறகும் 1 ஏப்ரல் 1997 ஆண்டிற்கு முன்னறும் பிறந்திருத்தல் வேண்டும்.  மேலும் பள்ளி இறுதித்தேர்வு (ப்ளஸ் 2 அல்லது உயர்நிலை படிப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள்  ஒரு வருட ஜப்பானிய மொழி கண்டிப்பாக கற்க வேண்டும் மற்றும் ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும்.
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக வளாகத்தில் நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் மாணவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இந்த தேர்வு எழுத ஜப்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் (MEXT)க்கு அனுப்பப்பட்டு அங்கு இறுதித்தேர்வு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பிப்ரவரி 2014க்குள் தகவல் தெரிவிக்கப்படும்.
விதிமுறைகளுடன் கூடிய விண்ணப்பப் படிவங்கள் ஜப்பானிய தூதரக வளாகம் (கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறை ) 12/1, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை - 600 018 என்ற முகவரியில் கிடைக்கும். தகுந்த ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 21 ஜுன் 2013 க்குள் அனுப்புதல் வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.studyjapan.go.jp/en/toj/toj0307e.html   என்ற  இணையதளத்தை பார்க்கலாம்  அல்லது 044 - 24323860-63 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. அன்பின் அதிரை போஸ்ட் - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - நல்ல பயனுள்ள தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.