Breaking News
recent

2,600 மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவன ஸ்காலர்ஷிப்!

2,600 மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதுதவிர, விளையாட்டு வீரர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கி ஊக்குவித்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கும் ஐடிஐ படிக்கும் 2 ஆயிரம் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபா வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்குகிறது. என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ், எம்.பி.ஏ. முதல் ஆண்டு படிக்கும்  600 மாணவர்களுக்கு மாதம்  ரூ.3 ஆயிரம் வீதம் படிப்புக் காலம் வரை கல்வி உதவித் தொகை வழப்படும். அகில இந்திய அளவில் மொத்தம் 2,600 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் பிளஸ் ஒன் மற்றும் ஐடிஐ படித்து வரும் பொதுப் பிரிவு மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தது  65 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாணவிகள் 60 சதவீத மதிப்பெண்களும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்ஜினீயரிங் பட்டப் படிப்பு மற்றும் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் பொதுப்பிரிவினர்  65 சதவீதமும் ஓபிசி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாணவிகள் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.பி.ஏ. முதல் ஆண்டு பொதுப் பிரிவு மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பில்  65 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓபிசி, தாழ்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாணவிகள் 60 சதவீத மதிப்பெண்களும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள், 01.07.2013 நிலவரப்படி  15 வயதிலிருந்து 30-வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது, 01.07.1983 தேதிக்குப் பிறகோ, 01.07.1998 அதற்கு முன்பாகவோ பிறந்திருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைகளின்படி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு  10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேறு எந்தக் கல்வி உதவித் தொகையும் பெறக் கூடாது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவரின் பெயரில் தனியே வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் முழுமையாக பூர்த்தி செய்தபின், அவ்விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, போதிய சான்றிதழ்களின் நகல்களோடு இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில வாரியாகவும், மண்டல வாரியாகவும் தகுதி வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.09.2013

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபாலில் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 15.10.2013

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://ioclscholar.sifyitest.com/IOCLES13/register.php

தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
Sify Technologies Limited
(IOCL ESS I-TEST DIVISION)
Plot No B 7, Sector-132,
Noida - 201301 (Uttar Pradesh)

விவரங்களுக்கு: www.iocl.com/Aboutus/IndianOilScholarships.aspx
மோ. கணேசன்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.