Breaking News
recent

நீரிழிவு நோய்க்கான இந்திய மாத்திரைக்கு அமெரிக்காவில் தடை

நீரிழிவு நோய்க்கான இந்திய மாத்திரைகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நீரிழிவு நோயாளிகளுக்கு விற்பனை செய்யப்படும் மாத்திரைகள் மீது ஆய்வு நடத்தியது. அப்போது அந்த மாத்திரைகளில் சில குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மாத்திரை தயாரிக்கும் 15 கம்பெனிகளுக்கு கடந்த 18–ந்தேதி நோட்டீசு அனுப்பியது.
இவற்றில் இந்தியாவில் இயங்கும் மிகப்பெரிய மருந்து கம்பெனியும் அடங்கும். இங்கு நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேதிக், சித்தா மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த 15 கம்பெனிகள் தயாரிக்கும் மாத்திரைகளை அமெரிக்காவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோய் மாத்திரைகளை அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் இந்திய மருந்து கம்பெனிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஏனெனில் கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் ரூ.84 ஆயிரம் கோடி முதல் ரூ.132 ஆயிரம் கோடி அளவுக்கு நீரிழிவு நோய் மாத்திரைகள் விற்பனையாகி உள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.