Breaking News
recent

கத்தோலிக்கத் தலைவர் ரமழான் பெருநாள் வாழ்த்து செய்தி!

முஸ்லிம்களின் ரமழான் பெருநாளை முன்னிட்டு கத்தோலிக்கத் தலைவரான போப் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் அதில்,

முஸ்லிம் மக்கள் மீதும்,மதத் தலைவர்கள் மீதும் தனக்கிருக்கும் நட்பையும், மரியாதையையும் தெரிவிக்கும் வண்ணம் இவ்வாறு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஆண்டு அனுப்பப்படும் செய்தியைப் படிப்பவர்கள் அனைவரும், கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தினரிடையே கல்வி மூலம் பரஸ்பரம் மரியாதையை ஊக்குவித்துக் கொள்ள வேண்டும் என்று போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். 

வாழ்க்கை,கண்ணியம் மற்றவர்களின் உரிமைகள் இவை அனைத்தையும் மதிக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த செய்தி பொதுவானது என்றும் அவர் கூறியுள்ளார். முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ இளைஞர்கள் மற்றவர்களைக் கண்ணியமாகப் பேச மற்ற மதத்தினரின் பழக்கங்களை இழித்துக் கூறாமலிருக்க கற்பித்தல் வேண்டும் என்று அவர் தனது ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

வாடிகன் நகரில் சென்ற மார்ச் மாதம் அவர் நிகழ்த்திய உரையில் இஸ்லாமியர்களுடான பேச்சுவார்த்தை குறித்து குறிப்பிட்டதை தனது ரம்ஜான் வாழ்த்திலும் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். இரு பிரிவினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும்,ஒத்துழைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய உரையினை இந்த வாழ்த்திலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். போப்பின் இந்த வாழ்த்து செய்தி அரபு உட்பட பல மொழிகளில் வெளியில் அனுப்பப்பட்டுள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.