அதிரை முகைதீன் ஜும்மா பள்ளியின் “ பாராட்டிற்குறிய சுத்தம்”


இங்கு படத்தில் நீங்கள் பார்ப்பது அதிரையில் அமைந்துள்ள முஹைதீன் ஜும்மா பள்ளியில் உள்ள சிறு நீர் கழிக்கும் இடமாகும்..இதன் சிறப்பு அம்சம் என்னவெனில்,நாம் அமர்ந்து சிறு நீர் கழிக்கும் போது,அதன் துளிகள் நம்முடைய கால்கள் மற்றும் துணியில் படாதவாறு மிக ஆழமாக குழியை அமைத்துள்ளார்கள்.இதனால் நிம்மதியாக சிறு நீர் கழிக்க முடியும்.இப்படி அமைத்தவர்கள் பாராட்டுக்குரியோர்.

அதே நேரம்,அதிரையில் உள்ள மற்ற பள்ளிகளிலும்,மற்ற ஊர்களிலும் சிறு நீர் படும் இடம் சிறிதாக,தட்டையாக இருப்பதால் - சிறு நீர் துளிகள் உடல் மற்றும் உடைகளில் படும் அபாயம் உள்ளது.இதை நீங்கள் மக்களிடம் கொண்டு சென்று,இனி வரும் காலங்களில் மேற்கண்ட முறையில் அமைய விழிப்புணர்வு ஏற்பட உதவி செய்யும் படி வேண்டுகிறேன்.

இதன் மூலம் நாம் நம் தொழுகையை பேணிக் கொள்ள உதவும்,இன்ஷா அல்லாஹ்.
தகவல்:அர அல
Unknown

Unknown

Related Posts:

Blogger இயக்குவது.