Breaking News
recent

அதிராம்பட்டினத்தில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: பெண்கள் போராட்டம்

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட் கடற்கரைதெரு, காஜாநகர், தரகர்தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய இடங்களுக்கு கடந்த 5 நாட்களாக சரிவர குடிநீர் சப்ளை செய்யப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
அவர்கள் குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினளர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செங்கமல கண்ணன் மற்றும் சிறப்பு சப்– இன்ஸ்பெக்டர் கமலநாதன், பேரூராட்சி அலுவலர் பழனிவேல் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்கள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.