Breaking News
recent

ஆதார் கார்டுகள் அவசியமில்லை!

திருமணப்பதிவு, சம்பளம் விநியோகம், பிராவிடண்ட் பண்ட், சமையல் எரிவாயு வழங்குவது உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டைகள் அவசியம் என பல மாநில அரசுகள் கூறிவருகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிர அரசு ஆதார் கார்டுகள் இல்லாதோரின் திருமணத்தை பதிவு செய்யப்போவதில்லை என்று கூறியது. 

இந்நிலையில் ஆதார் அட்டையின் தன்மைகள் குறித்த பொதுநல வழக்கு ஒன்றில் திருப்பு முனையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சவுஹான், எஸ்.ஏ. பாப்தே ஆகியோர் கூறியதாவது:-

மத்திய மாநில அரசுகளின் முக்கிய சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க அவர்களிடம் ஆதார் அட்டைகள் அவசியம் இருக்க வேண்டியதில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் 14 மற்றும் 21-ன் படி இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. 

இன்னும் முழுமையாக மக்களுக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அரசின் முக்கியச் சேவைகளுக்கு ஆதார் அட்டைகள் அவசியம் தேவையில்லை. மேலும் சட்ட விரோதமாக இந்தியாவில் குடிபெயர்ந்துள்ளோருக்கு இந்த ஆதார் அட்டைகளை வழங்கக்கூடாது. 

இவ்வாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
நன்றி: மாலைமலர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.