Breaking News
recent

வக்ஃப் சொத்துகளை அபகரிப்பது ஜாமீன் இல்லா குற்றம்!


புதுடெல்லி: வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்குமான வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
முன்னர் இம்மசோதாவை மாநிலங்களை அங்கீகரித்திருந்தது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால் இம்மசோதா அமலுக்கு வரும். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தாக்கல் செய்த மசோதாவை பா.ஜ.க., இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர்.
Parliament 1_1வக்ஃப் சொத்துகளை விற்பது, தானமாக அளிப்பது, அடகு வைப்பது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் சொத்துகளை அபகரித்தல் ஜாமீன் இல்லாத குற்றமாகும். ஆனால், வக்ஃப் சொத்துகளை 30 ஆண்டுகளுக்கு கல்வி தேவைகளுக்காகவும், 15 ஆண்டுகள் வர்த்தகத்திற்காகவும் குத்தகைக்கு வழங்கலாம்.
புதிதாக உருவாக்கப்படவிருக்கும் வக்ஃப் வளர்ச்சி கார்ப்பரேஷன் மூலம் வக்ஃப் சொத்துகள் குத்தகைக்கு விடப்படும். ஒவ்வொரு பத்து ஆண்டுகள் கழியும்போதும் வக்ஃப் சொத்துகள் மீது சர்வே நடத்தப்படும்.
நன்றி: http://www.thoothuonline.com
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.