Breaking News
recent

உ.பி கலவரம்: பட்டுக்கோட்டை தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

உ.பி மாநிலம் முசஃபர்பூர் மாவட்டம் கவல் கிராமத்தில் ஒரு பெண் கேலி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கொலையும் அதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்கள் மதவாத பாஜகவால் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக திருப்பப்பட்டு பல உயிர்கள் பலியாகி,பலநூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளான கொடுமை நடந்துள்ளது. 
இதைத் தடுக்காத உ.பி மாநில அரசைக் கண்டித்தும், கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கக்கோரியும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரியும் த.மு.மு.க தமிழக முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்ட நடத்தி வருகிறது.
அதுப்போல் நேற்று14-9-13 மாலை 4மணிக்கு  பட்டுக்கோட்டை தமுமுக சார்பில் நடந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மாவட்ட,கிளை நிர்வாகிகளும் இன்னும் மதுக்கூர்,அதிரை தமுமுக தொண்டர்களும் பொதுமக்களும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


தமுமுகவின் இந்த ஆர்ப்பாட்டதை அதிரைப்போஸ்டின் டிவிட்டர், முகநூலில் உடனுக்குடன் பதிவேற்றப்பட்டது

இந்த ஆர்பாட்டாத்தில்,

மலரட்டும் மலரட்டும் 

மனிதநேயம் மலரட்டும்
ஓங்கட்டும் ஓங்கட்டும்
சமூக ஒற்றுமை ஓங்கட்டும்..
கண்டிக்கிறோம்...கண்டிக்கிறோம்
உ.பி யில் நடந்துவரும்
வன்முறைகளைக் கண்டிக்கிறோம்
கலவரத்தைத் தடுக்காத
உ.பி அரசைக் கண்டிக்கிறோம்
கலவரத்தைத் தூண்டிவிடும்
காவிகளைக் கண்டிக்கிறோம்.
ஆட்டம்போட பயங்கரவாதி
ஆட்சியிலிருப்பது சமாஜ்வாதி
தட்டிக்கேட்க எங்கே நாதி
முஸ்லிகளுக்கு எங்கே நீதி..?
போடாதே போடாதே
போலி வேடம் போடாதே
முஸ்லிம்களை ஏமாற்ற
நடிப்பு குல்லாய் போடாதே
கையாலாகா தனத்திலே
உ பி யின் அரசாங்கம்
காவிகளின் முன்னால்
செய்வதோ சிரசாங்கம்..
வெட்கக்கேடு வெட்கக் கேடு
சமாஜ்வாதி ஆட்சிக்கு
வெட்கக்கேடு வெட்கக்கேடு
மசூதி சுவரை இடித்தார் என்று
பெண் அதிகாரி பணி நீக்கம்
முஸ்லிம்களைக் கொல்வோருக்கு
தருவதோ பெரும் ஊக்கம்..
மானக்கேடு.. மானக்கேடு
உ பி அரசுக்கு மானக்கேடு
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
வன்முறைக் கும்பல்மீது
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
கட்டுப்படுத்து கட்டுப்படுத்து
கலவரத்தைத் தூண்டிவிடும்
காவிக்கும்பலைக் கட்டுப்படுத்து
மனிதஎலும்பு கடிக்கவே
மதவெறி ஓநாய் அலையுது
பதவிசுகம் கூடியே
ஆட்சி தூங்கி வழியுது

வெறியர்கள் ஆட்டமோ 
விடையில்லாத விடுகதை.. 
முஸ்லீம்கள் துடிப்பதோ
முடிவில்லாத தொடர்கதை..
கரும்புக்கரம் நீட்டாதே
இரும்புக்கரம் காட்டு
கயவர்கள் கையிலே
விலங்குகளை மாட்டு
முஸ்லிம்கள் வாழ்விலே
தாங்குவதோ மா-ரணம்
முறையான நீதியால்
கொடியநிலை மாறனும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரணம் கொடுத்து
சட்டத்தின் ஆட்சியை
உ.பி. அரசே நடத்து...
ஓங்கட்டும் ஓங்கட்டும்
சமுதாய ஒற்றுமை ஓங்கட்டும்
மலரட்டும் மலரட்டும்
மனிதநேயம் மலரட்டும்
உள்ளிட்ட தொடர் முழக்கங்கள் எழுப்பட்டது.


Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.