அதிரையில் இன்று 17-9-13 காலை 10 மணிமுதல் "அம்மா திட்டம்" நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்தனர். இந்த திட்டத்தில்,
1. பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்).
1. பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்).
2. குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள். 3.பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள்.
4. சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள்.
5. வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
6. முதல் பட்டதாரி / குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற் கான சான்றிதழ்கள்.
7.ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள்.
8. குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள். 9. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள்.
10. துயர் துடைப்பு / விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை. உள்ளிட்ட பிரச்சினகளுக்கு தீர்வுகள் ஏற்பட்டது.
அதிரைக்கும் பட்டுக்கோட்டைக்கு காலத்திற்கும் அலைந்தும் திரிந்தும் ஏற்பாடத தீர்வு அதிரையில் அதுவும் ஒரேநாளில்- பணம் செலவின்றி கிடைத்த பயன்- தீர்வு, அதிரை மக்களை மகிழ்ச்சியில் ஆழத்தியது.
அப்போது இந்த திட்டத்தை அறிமுகம் செய்து கடைகோடி மனிதனுக்கும் அரசின் திட்டம் போய் சேர்ந்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு தங்களின் நன்றியை சொன்னார்கள்.
இந்த அம்மா திட்ட முகாம், அதிரை பைத்துல்மால் அலுவலகத்திலும், துர்கா செல்லியம்மன் சமுதாயக்கூடத்திலும் நடந்தேரியது.
இந்த முகாமில் அதிரை அதிமுகவினர்,அதிரை தமுமுகவினர், அதிரை ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தை சேர்ந்தவர்கள் களப்பணியாற்றி மக்களுக்கு உதவினர். இந்த விழாவில் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களும் துணைச் சேர்மன் பிச்சை அவர்களும் கலந்துக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்