Breaking News
recent

சர்க்கரை, பாமாயில் நவ-1ம் தேதி ரேஷன் கடையில் வாங்கிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் எந்த பொருளும் இல்லை என்று சொல்லக்கூடாது என்பதற்காக, இந்த மாதம் 21-ந் தேதியே, கோடவுன்களில் இருந்து அரிசி, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில், கோதுமை உள்பட ரேஷனில் வழங்கும் அனைத்து உணவுப்பொருட்களும் எல்லா ரேஷன் கடைகளுக்கும் அனுப்பிவைக்கவேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 21-ந் தேதியில் இருந்தே உணவுப்பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.எனவே, ரேஷன் கடைகளில் 1-ந் தேதி அன்றே, அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்றவற்றை பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம். பொதுவாக, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் அவர்கள் தேவைக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்றவற்றை சப்ளை செய்கிறோம். கார்டுதாரர்கள் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாமல் பொருட்களை வழங்க வேண்டும்.

எந்த கடையிலாவது முறையாக பொருட்கள் வழங்கவில்லை என்றால், 9445464748., 7299998002., 7299008002., 8680018002., 8680028003., 7200018001., 7200048002 ஆகிய மொபைல் எண்களில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் புகார் தெரிவிக்கலாம். 
அல்லது 044 28592828., 044 25672224 ஆகிய ஹெல்ப் லைன் தொலைபேசிகளில் புகாரை தெரிவிக்கலாம். 
அல்லது schtamilnadu@gmail.com, consumer@tn.gov.in, coopsec@tn.gov.in, ஆகிய இ-மெயில் அல்லது www.consumer.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். 
சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது மட்டுமின்றி, எந்த கடையிலாவது பாமாயில் இல்லை, சர்க்கரை இல்லை என்று புகார் வந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.