Breaking News
recent

அதிரையில் தாசின் ரைஸ் மில் உரிமையாளர் வீட்டில் 27 பவுன் நகை திருட்டு!

அதிரை சேது ரோட்டில் உள்ள  தாசின் ரைஸ் மில் உரிமையாளர் ஜெஹபர்தீன் அவர்கள் வீட்டில் இன்று [ 04-10-2013 ] அதிகாலை சுமார் 4.45 மணியளவில் தொழுகைக்காக எழுந்து பார்க்கும் போது வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புற கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையிலும், பெட்ரூமில் இருந்த ஸ்டீல் பீரோல் கொல்லைபுறத்தில் வைத்து உடைத்து அதில் உள்ள 27 சவரன் ஆபரணத்தங்க நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் ஆகியோரின் தலைமையில் அதிரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டன.
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.