தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்ட அளவிலான மாற்றுதிறனாளி களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் வருகிற 9–ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் நீளம் தாண்டுதல், 50,100,200 மீட்டர் ஓட்ட பந்தயம், மினி கூடைப்பந்து, நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், டென்னிஸ் பந்து எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், ஈட்டிதாண்டுதல் போன்ற விளையாட்டுகள் நடைபெறுகிறது.
போட்டிக்கு வரும் வீரர்– வீராங்கனைகள் அங்கீகரிக்கப்பட்ட டாக்டரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று அல்லது மாவட்ட மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று அல்லது தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தவிர்க்க இயலாத ஆணை ஆகியவை கட்டாயமாக பெற்று வருதல் வேண்டும்.
போட்டியில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்