Breaking News
recent

மாநகராட்சி ஆகிறது தஞ்சாவூர்! அதிரை மக்களுக்கு சில முக்கிய யோசனைகள்!!

கடந்த பட்ஜெட் கூட்டத் தொட ரின்போது, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப் படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த 2 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோ தாக்களை தமிழக சட்டப் பேரவை யில் திங்கள்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தாக்கல் செய்தார்.
அந்த மசோதாக்களில், “மக்கள் தொகை அதிகரித்தல், ஆண்டு வருமானத்தில் முன்னேற்றம் மற்றும் மக்கள்தொகை பெருக்கத் துக்கேற்ப அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு வகை செய்யப்பட வேண்டிய குடிமைப் பணிகளின் அளவீட்டையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம் படுத்துவதைக் கருத்தில் கொண்டு தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல் வர் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார். மேற்சொன்ன அறிவிப்புகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக, 1981-ம் ஆண்டு கோவை மாநகராட்சி சட்டத்தின் வகைமுறைகளைத் தழுவி ஒரு சிறப்புத் திட்டத்தினை இயற்றுவதென அரசு முடிவு செய்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. 2 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாநக ராட்சிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்கிறது.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த சட்டம் நிறைவேறியதும் தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சி கள், மாநகராட்சிகளாக தரம் உயர்ந்துவிடும். அந்த நக ராட்சிகளின் தலைவர்கள் மேயராக வும், துணைத் தலைவர்கள் துணை மேயராகவும் அழைக்கப்படுவர். இதுகுறித்து அரசு அறிவிக்கை வெளியிடும் வரை அவர்கள் அப்பதவியில் இருக்கலாம் அல்லது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவியில் இருக்கலாம்.
புதிய மாநகாரட்சிப் பகுதி களுக்கு அதிக பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெருந்தொகை நிதியாக ஒதுக்கப்படும். இதன் மூலம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகும்.

 அதிரை மக்களுக்கு சில யோசனைகள்
தஞ்சாவூர் மாநகராட்சி என்கிற அந்தஸ்து கிடைக்கிறபோது. அதற்கு மத்திய மாநில அரசுகளிடமிருந்து பல சலுகைகள், திட்டங்கள் கிடைக்கும். 

தொழில் வளம் கூடும். மக்கள் தொகை அதிகரிக்கும். இந்த நிலையில், தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் நிலங்களுக்கு விலையேற்றம் அதிகரிக்கும். 

அதிரை மக்களுக்கு தஞ்சாவூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் இறையருளால் நிலங்கள் நிறையவே உண்டு. அதனை அவசரப்பட்டு விற்றுவிடாமல், பொருமைகாக்க வேண்டும். நாளுக்கு நாள் நிலத்தின் விலை கூடுமேதவிர இறங்கப்போவதில்லை.

வீடுகள், வியாபார வளாகம்,அலுவலகம் போன்றவற்றை கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் வரும். அத்துடன் அதிரை இளைஞர்கள் பலர் புதிய தொழில் துவங்க எத்தனித்து வருகிறார்கள் அவர்கள் தஞ்சாவூரில் துவங்கலாம்.

சென்னையில் அதிரைமக்கள் பல்லாயிரம்பேர் இருந்தும் பல தொழில்கள் செய்தும் சொந்த நிலம்,வீடு,கடை,கட்டிடங்கள் வைத்திருப்போர் மிகமிக சொற்ப்பமே! 

சென்னையில் முன்னொரு காலத்தில், நிலத்தின் விலை கடுகளவு இருந்த போது அலட்சியம் செய்தநாம் இன்று கிடுகிடு விலையேற்றத்தால் தட்டுதடுமாறி நிற்கின்றோம். வீடு,கடை,அலுவலகம் போன்றவற்றிக்கு நாம் வாடகை கொடுத்தே நமது உழைப்பு விழலுக்கு இறைத்தநீராகி போகின்றது.

அந்த தவரை தஞ்சையில் செய்யவேண்டாம் என்பதே நமது கருத்தாகும்.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.