மண்ணடி பகுதியில் கட்டிடங்கள் விரிசல்!

மெட்ரோ ரெயில் பணி வண்ணாரப்பேட்டையில் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு மண்ணடி பகுதி பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள லுத்ரன் ஆலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயங்களில் விரிசல் ஏற்பட்டது.
மெட்ரோ ரெயில் பணி நடந்த போது பழமை வாய்ந்த இந்த கிறிஸ்தவ ஆலயங்களில் விரிசல் ஏற்பட்டது. அண்ணாபிள்ளை தெருவில் உள்ள 6 அடுக்கு மாடி வணிக வளாகத்தில் விரிசல் இப்போது காணப்பட்டது. இதில் கீழ் பகுதியில் வங்கி, கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
4–வது மாடியில் வசிக்கும் முகம்மது யூசுப், 2–வது மாடியில் உள்ள முக்தார் வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த காம்பளக்ஸில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விரிசல் ஏற்பட்ட பகுதியை அப்பகுதி மக்கள் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரிசல் ஏற்பட்ட வீடுகளை ஆய்வு செய்தனர்.
மெட்ரோ ரெயில் பணியால் விரிசல் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்களால் இந்த விரிசல் காணப்படுகிறதா? என தொழில் நுட்ப வல்லூனர்கள் ஆய்வு செய்தனர்.
நன்றி: மாலைமலர்
Unknown

Unknown

Related Posts:

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.