Breaking News
recent

அதிரை அருகே வாகனம்,பயணிகள் மீது திடீர் தாக்குதல்! நடந்தது என்ன?

அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை இடையில் இருக்கும் தம்பிக்கோட்டையில், நாகூரிலிருந்து ஏர்வாடி சென்ற கேரள வாகனம் மாற்றும் பயணிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

இன்று மாலை 6:30 மணியளவில், நாகூரிலிருந்து ஏர்வாடி சென்ற  கேரள டூரிஸ்டர் வேனில் ஆண்களும்,பெண்கள் குழந்தைகள் என சுமார் 20 பேர் சென்றுள்ளனர். 


தம்பிக்கோட்டையில் சாலை ஓரக் கடையில் வேனை நுறுத்தி டீ-சாயா குடித்தனர்.
அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ஐந்து பேர்கொண்ட  கும்பல் அந்த வேனை மீது கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளது. அத்துடன் காம கொடுரமான வார்தைகளில் திட்டியுள்ளனர். 

இத்தாக்குதலில், வேனின் கண்ணாடி சேதமடைந்தது. அத்துடன் வேனில் இருந்த பெண்களின் கையை இழுத்துள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வேன் டிரைவர் வேனை பதட்டத்துடன் அதிரைக்கு கொண்டு வந்துவிட்டார்.

இதனை அறிந்த அதிரை மக்கள் கூடினர். TMMK,MMK,PFI,SDPI உள்ளிட்ட அமைப்பினர் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர்களை PFI வழக்குரைஞர் எஸ்.நிஜாம் அவர்கள் காவல் நிலைத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் சார்பாக புகார் அளித்தார்.
அதனை பெற்றுக்கொண்டு FIR பதிவு செய்துள்ளானர்
அத்துடன் அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிசந்திரன் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.மேலும், அவர் தலைமையில் சம்பவம்  நடந்த இடத்திற்கு விரைந்து சென்று  சம்பந்த பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றார்.
 இந்த புகார் சம்மந்தாமாக அதிரை PFI தொடர்ந்து கண்கானித்துவரும் என   PFI வழக்குரைஞர் எஸ்.நிஜாம் அவர்கள் தெரிவித்தார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.