தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள 136 அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளி மாணவர்களுக்கு 3–ம் பருவத்திற்கான விலையில்லா பாடபுத்தகங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சேமிப்பு மையத்திலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சி.நரேந்திரன் மேற்பார்வையிட்டார். பணியில் பிரிவு எழுத்தர்கள் அய்யாச்சாமி, ராஜா, பாலச்சந்திரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கணித உபகரணப்பெட்டிகள், கூடுதல் சீருடைகள் மற்றும் புத்தகப்பைகளும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்