Breaking News
recent

அதிரை பேரூராட்சி தலைவரை புறக்கணிக்கும் திமுக!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட பல கட்சிகள் ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்துள்ளது.

தஞ்சை தொகுதியில், திமுக சார்பில் டிஆர்.பாலு போட்டியிடுகிறார். இதனைத் தெடர்ந்து, அதிரையில் இருக்கும் கூட்டணி கட்சிகளான மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை அதிரை திமுக கிளை நிர்வாகிகள் நகர செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர்.

இந்த சந்திப்பின் போது திமுக தரப்பில் பலரும் செல்கின்றனர். ஆனால், திமுகவில் போட்டியிட்டு வெற்றிபெற்று, திமுக அறிவித்துள்ள டிஆர்.பாலு அவர்களுக்கு ஆதரவு திரட்டிவரும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்களை அழைக்காமல் புறக்கணிப்பு செய்வது ஏன்? என்று திமுகவினரும் விபரம் அறிந்த அதிரையர்களும் கேள்வி எழுப்புகின்றனர்... பதில் சொல்லுமா அதிரை திமுக?
adirai post

adirai post

2 கருத்துகள்:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.