Breaking News
recent

ஆன்லைனில் வாக்களிக்கும் உரிமை வழங்க சவூதி இந்தியர்கள் கோரிக்கை!

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் பயோமெட்ரிக் முறை மூலம் ஆன்லைனில் வாக்களிக்கும் வசதி வேண்டும் என்று சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டிருக்கும்போதும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தேர்தல் சமயத்தில் தங்கள் தொகுதிகளில் இருந்தால்மட்டுமே தங்கள் உரிமையை அவர்கள் பயன்படுத்தமுடியும். ஆனால், லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும்போது வாக்களிப்பதற்காக மட்டும் செலவு செய்து இந்தியா வருவது சாத்தியமில்லை என்று பெரும்பாலோர் கருதுவதால் ஆன்லைன் கோரிக்கைகள் தொடர்ந்துள்ளன. 

சவுதி அரேபியாவில் மட்டும் 2.8 மில்லியன் இந்தியர்கள் வாழ்ந்துவருவதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் குறைந்தது 65 சதவிகிதத்தினர் இந்தியாவின் தென்பகுதி மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். 

இந்த மாநிலத்தின் மக்கள் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக அறியப்படுவதால் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இம்மாநிலத்தவருக்கும் பொது விவகாரங்களில் பரந்த விழிப்புணர்வு உள்ளது. கடந்த 15 வருடங்களாக பொதுத் தேர்தலில் பங்கெடுக்க முடியாதது குறித்து சவுதியின் ஜெட்டா நகரில் வசித்துவரும் சுபைர் சித்திக் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். 

அங்கு இந்தியத் தூதரக ஜெனரலாகப் பணிபுரியும் ஃபைஸ் அகமத் கிடாவி, தகுந்த பாதுகாப்புடன் செயல்படுத்தப்படும் ஆன்லைன் வாக்களிப்பை வரவேற்றுள்ளார். சவுதியின் தலைநகர் ரியாத்தில் வசிக்கும் அகமது நசீம், பல நாடுகள் இந்த முறையை செயல்படுத்தி வருவதைக் குறிப்பிடுகின்றார். 

புலம் பெயர்ந்த இந்தியர்கள் தாய்நாட்டுடன் இணைந்திருக்கும் விதத்தில் பிரவாசி பாரதீய திவாஸ் திட்டத்தில் அதிக பணம் செலவிடும் இந்திய அரசு, வாக்குப் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி: மாலைமலர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.