Breaking News
recent

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மயிலாடுதுறை தொகுதி ஒரு பார்வை!

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட இருக்கும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி ஒரு பார்வை!


கும்பகோணம் மகாமகக்குளம், பூம்புகார் துறைமுகம் போன்ற வரலாற்று சின்னங்களும், பழைமையான கோவில்களும் நிறைந்த தொகுதி மயிலாடுதுறை.

இவை தவிர சுதந்திரப்போராட்ட தியாகிகள் எஸ்.ஏ.இப்ராகிம், எம்.பாட்சா, அப்துல்லத்தீப். பாபநாசம் அப்துல் வகாப், ஆக்கூர் ராஜாமுகமது, ஆக்கூர் அப்துல்லா, மயிலாடுதுறை ஏ.எம்.இஸ்மாயில், அப்துல் கரீம் ராவுத்தர், ஆலூர் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட ஏராளமான தியாகிகளை நாட்டுக்கு அர்ப்பணித்த தொகுதி இது.

தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. 


தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி , பூம்புகார், பாபநாசம் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டசபை தொகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளன. 

அதே போன்று, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் முன்னர் இருந்த குத்தாலம் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, புதிதாக பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும் மிக அதிக அளவில் உள்ளனர்.

இங்கு இதுவரை காங்கிரஸ் கட்சி 8 முறைகளும் திமுக இரு முறைகளும் தமிழ் மாநில காங்கிரஸ் இரு முறைகளும் அதிமுக ஒருமுறையும் இரட்டை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.

மொத்த வாக்களர்கள் எண்ணிக்கை: 10,96,816

இதுவரை இந்த தொகுதியில் வென்றவர்களின் விவரம்:

1951 - இரட்டைஉறுப்பினர் ஆனந்தநம்பியார்(கம்யூனிஸ்ட்), சந்தானம்(காங்கிரஸ்)
1962 - (தனி) மரகதம் சந்திரசேகர்(காங்கிரஸ்)
1967 - (தனி) சுப்ரவேலு(தி.மு.க)
1971 - (தனி) சுப்ரவேலு(தி.மு.க)
1977 - குடந்தை ராமலிங்கம்(காங்கிரஸ்)
1980 - குடந்தை ராமலிங்கம்(காங்கிரஸ்)
1984 - பக்கீர் முகம்மது(காங்கிரஸ்)
1989 - பக்கீர் முகம்மது(காங்கிரஸ்)
1991 - மணிசங்கர் அய்யர்(காங்கிரஸ்)
1996 - பி.வி. இராஜேந்திரன்(தமிழ் மாநில காங்கிரஸ்)
1998 - கிருஷ்ணமூர்த்தி(தமிழ் மாநில காங்கிரஸ்)
1999 - மணிசங்கர் அய்யர்(காங்கிரஸ்)
2004 - மணிசங்கர் அய்யர்(காங்கிரஸ்)
2009 - ஓ. எசு. மணியன்(அதிமுக)

2014- ......................................................?

நன்றி:வைகை அனிஷ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.