தஞ்சை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்!

தஞ்சை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரசுராமன் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை பேராவூரணியிலிருந்து தொடங்கினார்.
பிரசார பயணத்தை அ.தி.மு.க. விவசாய அணி மாநில தலைவர் துரை.கோவிந்தராஜன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது 

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தஞ்சை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கு.பரசுராமனை அறிவித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான கால கட்டத்தில் நடைபெற உள்ளது. அமெரிக்கா போன்ற நல்ல நாடுகள் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளன. ஜெயலலிதாவின் நல்ல நோக்கம் நிறைவேற அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித்தர வேண்டும். வலிமையான இந்தியா அவரது தலைமையில் அமைய அனைவரும் பாடுபட வேண்டும். என்று பேசினார்.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.