Breaking News
recent

FLASH NEWS : மலேசியா விமானம் கண்டுபிடிப்பு!

இப்படியொரு தலைப்புடன் சமூக வலைப்பங்களில் விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை வலம் வருகின்றது. இது தவறான தகவல் என்பது மட்டுமல்ல மிகவும் பயங்கரமான மோசடியாகும். இந்த மோசடிக்குறித்த தகவல் முழுமையாக சென்று சென்றடையவே. அதே தலைப்பை இட்டுள்ளோம்!
வேகமாகப் பரவும் விமான வதந்தியால் மற்றவர்களின் சொந்த விவரங்களை திருடி காசாக்கும் இணைய திருடர்கள் காட்டில் கொண்டாட்டம்தான். 

இயற்கை பேரிடர், அசம்பாவிதமான சில நிகழ்வுகள் போன்றவை நிகழும்போது அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். 


மோசடி படங்களில் ஒன்று!
குறிப்பாக அந்த நிகழ்வுகளில் தொடர்பு டையவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அதுதொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள தினமும் கவலையுடன் ஏதெனும் வழி கிடைக்காதா என தவிப்பர்.அப்படிப்பட்டவர்களை குறி வைத்துதான் இந்த வியாபாரம் களை கட்ட துவங்கி உள்ளது.

வழக்கம்போல, "மால்வேர்" எனப்படும் கணினிகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மென்பொருள்களை உருவாக்கிப் பரப்பும் ஹேக்கர்களின் வேலைதான் இது. அதுவும் இந்த வீடியோவை பிபிசி, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறி அந்த வதந்தியின் நம்பகத் தன்மையைக் கூட்ட ஹேக்கர்கள் முயல்கின்றனர்.

அந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் முதலில் அதைப் பகிர வேண்டும் என்றொரு நிபந்தனைக் கட்டளையையும் ஹேக்கர்கள் விதிக்கின்றனர். அத்துடன் அதைப் பார்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

அதைப் பகிர்ந்தாலும் அதில் வீடியோ எதுவும் தெரிவதில்லை. தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் உச்ச நிலையில் இருக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையில் தரையில் நிற்கும் விமானத்தைக் கடலில் கிடப்பது போல் காட்டுவதற்கு பெரிய அளவிலான முயற்சிகள் தேவை இல்லை


ஆனாலும் இதை நம்பியோ அல்லது என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க விரும்பியோ குறிப்பிட்ட வலை தளங்கள் அல்லது பேஸ்புக் பதிவுகளுக்குச் செல்பவர்கள் பலர். அவர்கள் ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவதுடன் விஷயம் முடிந்து விடவில்லை

இந்த விஷயத்தின் மறுபக்கத்தில் இணையத் திருடர்கள் பெருமளவிலான பணத்தை குவிக்கின்றனர். அதாவது "குறிப்பிட்ட வீடியோ வைப் பார்க்க வேண்டுமானால் உங்கள் சுயவிவரங்கள் வேண்டும். இது ஒரு கணக்கெடுப்பு. எனவே உங்கள் சுயவிவரங்களை சரிபார்க்க அனுமதி தரவும்" என்று விதிக்கப்படும் நிபந்தனைகளை நம்பி, வீடியோ பார்க்கும் ஆர்வத்தில் தகவல்களை அளித்தால் அவ்வளவுதான் நமது சுய விவரங்கள் அனைத்தும் பறிபோகும் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட.

ஹேக்கர்கள் உங்கள் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கறந்து விடுவார்கள். இந்தத் தகவல்களை வைத்துப் பெரிய அளவில் பணம் சம்பாதித்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மால்வேர் மென்பொருள் நிபுணர் கிறிஸ் பாய்டு எச்சரிக்கிறார்.

இதுபோன்ற ஒளிப்பட பதிவுகளை சமூக வலைதளங்களில் "லைக்" செய்திருந்தாலோ, பகிர்ந்திருந்தாலோ அவற்றை அழித்து விடுவதுடன், கையோடு நமது பாஸ் வேர்டையும் மாற்றிவிடுவது நலம் என்று இணைய தள விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எச்சரிக்கின்றனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.