Breaking News
recent

தஞ்சை தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் டி.ஆர்.பாலு!

தஞ்சை பாராளு மன்ற தொகுதியில் முதல் முறையாக தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார்.
இவர் தஞ்சை மாவட்டம் தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராசு. இவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கட்சிக்கு பணியாற்றி வருகிறார். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய முதுபெரும் தலைவர்களிடம் அரசியலில் பணியாற்றி நன் மதிப்பை பெற்றவர் டி.ஆர்.பாலு ஆவார்.
இவர் கடந்த 1957ம் ஆண்டு முதலே தி.மு.க.வில் தீவிர உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த 1974ம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் தி.மு.க. துணைச் செயலாளராகவும், பின்னர் 1976ம் ஆண்டு மிசா கைதியாக 1 வருடம் சிறைவாசம் அனுபவித்தார்.
கடந்த 1982ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்து உள்ளார். அதன் பின்னர் 1986ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
மேலும், பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். இவர் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த போது 14 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிப் பெற்றது. இதனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியால் பெரிதும் பாராட்டப்பட்டார்.
இவர் தொடர்ந்து 5 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996ம் ஆண்டு மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சராகவும், பின்னர் மத்திய சுற்றுச் சூழல் துறை மற்றும் மத்திய வனத்துறை மந்திரியாகவும் பதவி வகித்து வந்தார். மத்திய கப்பல் போக்குவரத்துதுறை மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார்.
கடந்த 1996 முதல் 2009 வரை தொடர்ந்து 13 வருடம் மத்திய மந்திரியாக இருந்து உள்ளார். இவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். இவரது மகன் டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.