அதிரை மமக அரங்க கூட்டம் ஏன்? அதிரை சர்புதீன் விளக்கம்!

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புனர்வு அரங்க கூட்டம்  08-11-15 அன்று மாலை 6 மணியளவில் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி ”இந்திய அரசியலும் சிறுபாண்மை மக்களின் நிலையும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த அரங்க கூட்டத்திற்கு அதிரையில் பெரும் ஆதரவையும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்ள இருகிறார்கள்!
இந்நிலையில் ”ஏன் அரங்க கூட்டம் நடத்துகிறீர்கள், தெருமுனைக்கூட்டம் நடத்தலாமே” என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, மமக ஆஸ்ரேலியா மண்டல பொருப்பாளர் அதிரை சர்புதீன் “இம்மாதம் மழைக்காலம் என்பதால் இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ள மமகவின் கூட்டம் அனைத்தும் அரங்க கூட்டமாக நடத்த மமக தலைமை முடிவு செய்துள்ளது, அந்த வகையில்தான் அதிரையிலும் அரங்க கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த 1ம் தேதி சென்னையில் நடந்த மக்கள் திரள் கூட்டம் நடந்த போது மழை வந்தது. எனவேத்தான் இம்முடிவு” என்றார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்