அடித்துக் கொட்டும் மழையில் அதிரடியாய் நிறம்பிய அதிரை மமக அரங்க கூட்டம்!

அதிரையில் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சாரா மண்டபத்தில் மமகவின் அரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மமகவின் பொதுச்செயளாலர் தமீமுன் அன்சாரி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.  
மாநில அமைப்புச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மமக ஆஸ்ரேலிய மண்டல பொருப்பாளர் அதிரை சர்புத்தீன், செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுத்தீன் மற்றும் பலர் கலந்துக்கொண்டார்.
அதிரையில் தொடர்ந்து கடும் மழை பெய்துவருகிறது. நிகழ்ச்சியின் போதும் மழை பெய்து கொண்டுதான் இருந்தது. ஆனலும், அடித்துக் கொட்டும் மழையிலும் அதிரடியாய் நிறம்பியது அதிரை மமக அரங்க கூட்டம்!
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் அண்மை காலமாக ம.ம.க வில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்து கேள்வி கேட்க அவகாசம் வழங்கப்பட்டது. இதில் அதிரையர்களின் கேள்விகளுக்கு தமீம் அன்சாரி பதில் கூறினார்.
மேலும் ம.ம.க வின் நடந்த கசப்பான நிகழ்வுகள் குறித்த வெள்ளை அறிக்கை மக்களுக்கு வழங்கப்பட்டது.







நன்றி படம்: அதிரைபிறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்