Breaking News
recent

ரிட்டன் விசா - 4

செலயாமா-இங்க வாவுல!
-(கபூருடைய வாப்பா-அன்வர் காக்கா) செத்த இருக்கிரீகளா இந்த வந்துட்டேன்.புள்ளக்கி இக்கதானே சாப்பாடு,ரெஜினாமாக்கு போன் போட்டு சொல்லிடு. புள்ள ஒன்னும் சொல்லயே,வெளிய பொறேமான்னு சொன்னுச்சி சரி வாப்பானு சொன்னே(ன்).மத்தது ஏது(ம்) சொல்லலிய.அதுகென்னா இப்போ?போனடிச்சி சொன்னாக்கா புள்ள வந்துரும்ல.இந்தாவுல புள்ள சொன்னத கேட்டியா ரஜினாவையும் பேதிகளியும் இப்ப உட்டுட்டு போக போதாம்.புள்ள எந்த முடிவு எடுத்தாலும் சரியாத(ன்)இருக்கும், நா சரி தம்பி உ விருப்பம் சொல்லிப்புட்டே(ன்).
(ரெஜினாட்ட போனுல சாப்பாடு விபரம் சொன்னப்பொறவு,கபூர் ஊட்டுக்கு வறான்)வாப்பா ரெண்டு நாள்ல உம்மாவ மதராசுக்கு கூட்டிக்கிட்டு போகலான்னு இருக்கேன்.உங்களுக்கும் உடம்ப செக்கப் பண்ணனும்.அஜீசு மெடிகல் ஆர்,ஆர் பார்மஸி தமிம் க்கு தெரிஞ்ச டாக்டர் அப்பாயிண்ட் மென்ட் வாங்கிட்டேன்.எல்லாரும் வேனுல போகலாம்.அப்பத்தான் தெவயான எடத்துல,மர நெலல்ல நிருத்திபோகலாம்.மழ சீசனால சுபுல கிளம்புனா,சாங்காலமெல்லாம் மொகரிபுக்கு முந்தி போயிடலாம்.வீட்ல அப்பாஸ் வந்து அவன் பொண்டாட்டியோட தங்கிக்குவா(ன்). நேரா மண்ணடி மூர் தெருவுல நம்மோட ஜாபர் காக்கா ஊடு ஒன்னு சும்மாத்தான் பூட்டி வச்சிருக்கு!காக்காட்ட சொன்னேன் சாச்சா(கபூர வாப்பா)சாச்சி வரதுல சந்தொசம்னு சொல்ல சொன்னிச்சு.என்ன தம்பி!சட்டு புட்டுன்னு முடிவெடுக்க!இப்ப எ உடம்பு நல்லாதா இருக்கு.உங்க உம்மாவத்தா,காட்டுனா காட்டனு!அவொ அப்படிதான் சொல்லுவாக,ராத்திரியானா ஒரே கால் கடுப்பு,விடிய விடிய தூங்குறதில்ல!கேட்டாகா, நல்லாத்தன் இருக்கேன் சமாளிச்சுடுவாக!எனக்கு ஒன்னும் மில்லடா வாப்பாஅலகரசன் தற மாத்திர மருந்து நல்லாத்த கேக்குதெ!உங்க வாப்பாவுக்குத்தான் ,டெஸ்டு எடுத்துப்பாக்கனும்.உடம்புல சத்துயில்ல!எதும் சரியா சாப்புட்ரட்து கிடயாது,ரத்த முருஞ்சுடிச்சு! கொடலு தூந்துருச்சி! ஜமாலு பல தடவ கூப்புட்டும் வரமுடியாதுன்னு ஒரே புடிவாதம் வாப்பா!இவ வேற டாக்டராட்டம் ஏதாவது சொல்லிக்கிட்டெ இருப்பா-எனக்கு ஒன்னு மில்ல தம்பி!-வாப்பா அதயும் பாத்துடுவோ,ஒன்னுமில்லன்டா நல்லதுதானே?
(கபூர் சொன்னதும் வாப்பா காரர் மருப்பேச்சு பேசாமல் இருந்து விட்டார்) மீனாட்சி தடுக்க எடுத்துக்கிட்டு வா பீங்கா(ன்) கலுவி வச்சிருக்கேன் சோத்தப்போடு.
(கபூரும் ,அன்வர் காக்காவும் சாப்புட உக்கார்ராங்க!கபுரு உம்மாவையும் உக்காரச் சொல்ல மருத்துட்றாங்க!)
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.