கச்சத்தீவும் முஸ்லிம் லீக்கும்!

1974ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பி முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஷெரீப் வெளிநடப்பு செய்தார்.
அப்போது நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது:''1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதியே நான் இந்த அவையில், கச்சத்தீவு இராமநாதபுரத்து ராஜாவுக்குத்தான் சொந்தமானது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்தேன்.
அவற்றைப் படித்துப் பார்க்க அரசாங்கம் தவறிவிட்டது. முன்னர் நான் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தேன். அந்தப் பகுதி மக்களின் கருத்தையோ, தமிழக முதல்வரின் கருத்தையோ, கேட்காததற்காக மத்திய அரசு வெட்கப்பட வேண்டும். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நானும் வெளிநடப்பு செய்கிறேன்'' என்று பேசிவிட்டு வெளிநடப்பு செய்தார்
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.