முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முஹம்மது அசாருதீன் தற்பொழுது அரசியலில் குதிக்கிறார், அகில இந்திய காங்கிரஸில் இணைகிறார்
இத்தகவலை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் அறிவித்தார்
கிரிக்கெட்டில் கேப்டனாய் இருந்து பல்வேறு வெற்றிகளை ஈட்டி தந்த இவர்,
கிரிக்கெட்டிலும் சொந்த வாழ்விலும் கசப்பான அனுபவங்களை பெற்றவர் எனபது யாவரும் அறிந்ததே , தன் சொந்த நல்ல மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஒரு நடிகையை திருமணம் செய்தவர் என்பதால் அனைத்து முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர் .
கிரிக்கெட் ஊழல் குற்றசட்டிலிருந்து இவருடன் குற்றம் சாட்டப்பட்ட அஜய் ஜடேஜா போன்ற வீரர்கள் அதிலிருந்து விடுபட்டுவிட்ட சூழ்நிலையில் இன்னும் இவர் குற்றம் மட்டும் நிரூபிக்கப்படாமலேயே இருப்பது வேதனை.
//குற்றம் சாட்டப்பட்ட அஜய் ஜடேஜா போன்ற வீரர்கள் அதிலிருந்து விடுபட்டுவிட்ட சூழ்நிலையில் இன்னும் இவர் குற்றம் மட்டும் நிரூபிக்கப்படாமலேயே இருப்பது வேதனை.//
பதிலளிநீக்குஅப்படியல்ல; அஸாருத்தீன் மட்டுமே மேட்ச் பிக்ஸிங் செய்ததாக அன்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். அப்போதைய பிஜேபி அரசும் + சந்திரபாபு நாயுடு கூட்டணி, ஒத்துக்கொண்டு விட்டால் அவரைக் காப்பாற்றுவதாகக் கூறி காலை வாரியதற்கு அவர் முஸ்லிமாகப் பிறந்தது ஒரு காரணமாயிருக்கலாம்.
அவர் மீது கிரிக்கெட் வெளிச்சம் படத்தொடங்கிய ஆரம்ப காலங்களில் அவர் மிகச்சிறந்த முஸ்லிமாக, ஒழுக்கமாகவே இருந்தார். (நியூசிலாந்து சென்று 'ஹலால் உணவு' தான் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு)
ஆனால், டால்மியாவிலிருந்து கபில், டெண்டுல்கர் என்று பலரும் சம்பந்தப்பட்ட பண ஊழலில், அஸாருத்தீன் மட்டுமே பலிகடா ஆக்கப்பட்டார் என்பது உண்மைதான். அவருடைய ஆட்கள் என்று சொல்லப்பட்ட ஜடேஜா, மோங்கியா போன்றவர்களுக்கு ஐந்தாண்டு தடை. அஸாருக்கு ஆயுள் தடை. கூடா நட்பால் சீரழிந்த ஒரு சாதனையாளராக அவரை காலம் உதாரணங் காட்டும்.