Breaking News
recent

தேசிய லீக் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுப்பு

தேசிய லீக் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுப்பு


வேலூர், மார்ச் 18: தேசிய லீக் கட்சித் தலைவர் பஷீர் அகமது வேலூர் தொகுதியில் போட்டியிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் வேலூர் மாவட்ட செயலர் எஸ்.கே. நிஜாமுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமத் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறது என்று தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச்செயலர் பேராசிரியர் அப்துல்காதர் பேட்டியளித்துள்ளார்.

இதனை நாங்கள் கண்டிக்கிறோம். தேர்தல் சம்பந்தமாக யாருக்கும் நாங்கள் வாக்களிக்கவில்லை. கோவையில் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தான் எங்களுடைய தேர்தல் நிலைபாடு குறித்து முடிவெடுக்கப்படும்.

இந்நிலையில் தன்னிச்சையாக ஆதரவு தெரிவித்ததாக அறிவிப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

1 கருத்து:

  1. தேசிய லீக் ஓர் அனைத்திந்தியக் கட்சி. அக்கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்களே பஷீர் அஹமதுவும், பேராசிரியர் அப்துல் காதரும். இது தெரியாமல் இரு உறுப்பினர் கட்சிக்கு சீட் கொடுத்த ஜெயலலிதாவை நினைத்தால் பாவமாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.