Breaking News
recent

முகவையில் தி.மு.க மாநாடு - மு.க. அழகிரி - ரித்தீஸீக்கு பிரச்சாரம்


இராமநாதபுரம், ஏப்ரல் 17 : ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள திடலில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.அத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.



காங்கிரஸ் சார்பில் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ திரு. ஹஸன் அலி அவர்களும், முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் திரு. செளக்கத் அலி அவர்களும், விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட தலைவரும், தி.மு.க மாவட்ட செயலாளர் திரு. ஆர்.ஜி.ஆர், மாநில இளைஞர் அணி திரு பெருநாழி போஸ், தமிழக் குடிசை மாற்றுத்துறை அமைச்சர் திரு. சுப. தங்கவேலன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரு. இரவிச்சந்திர ராமவண்ணி, இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பவாணி ராஜேந்திரன் உட்பட பலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.



இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் பேசினர். பின்னர் பேசி திரு. மு.க அழகிரி அவர்கள் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டியது முகவை மக்களின் கடமை எனவும், இராமநாதபுரம் தொகுதி உட்பட தமிழகத்ின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெரும் எனவும் கூறினார். மாநாட்டில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் முகவை நகரே நெரிசலில் சிக்கி தினறியது.

முகவைத்தமிழன்

முகவைத்தமிழன்

1 கருத்து:

  1. சீமாட்டி சிக்கந்தர்18 ஏப்ரல், 2009 அன்று 3:26 AM

    அரசல் புரசல் உரசல்

    * ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக நடிகர் ரித்தீஷ் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கட்சியினர் பலர் தலைமைக்கு புகார்கள் எழுதிய படி உள்ளனர். தொகுதியில் பிரசாரத்துக்கு செல் லும் நடிகர் எந்த பகுதிக்கு செல்கிறார் என்ற தகவல் கூட அந்த பகுதி கட்சி நிர்வாகிக்கு முறையாக தெரிவிப்பதில்லை. பிரசார திட்டம் குறித்து தெரிந்து கொள்ள கட்சி நிர்வாகிகள், நடிகரின் மொபைல் போனில் தொடர்பு கொண்டால் போனை அவர் எடுப்பதில்லை. அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்த யாராவது எடுத்து 'அண்ணன் பிசியாக உள்ளார்' என கூறி கட் செய்துவிடுகின்றனர். கட்சியினருக்கே இதே நிலை என்றால், தேர்தலுக்கு பின் நடிகரை சினிமாவில் மட்டும் தான் பார்க்க முடியுமோ என்ற பேச்சும் அடிபட துவங்கிவிட்டது.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.