மு.லீக் வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு - உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக காயிதெமில்லத் பேரவையின் உலக ஒருங்கிணைப்பாளரும், அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் வியாழக்கிழமை இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை நிலையமான காயிதெமில்லத் மன் ஜிலில் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற அவசர செயற்குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் சமுதாய வேண்டுகோளின்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் பள்ளிக்கல்வியை ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளிப்படிப்பின் போதே மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜமால் முஹம்மது கல்லூரியில் கல்லூரிப் படிப்பினைப் பயின்றார்.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இவர் துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பத்துறையில் உதவித் தலைவராக இருந்து வருகிறார்.
துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவராகவும், ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
அமீரகத்தில் சமுதாயப் பணிகளின் மூலம் இந்திய மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார். அமீரகத்தில் பணிபுரிந்து வந்தாலும் தாயகத்தில் சமூகநலப்பணி மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலைக் கொண்டவர்.
இந்த அவசர செயற்குழுவில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சையத் சத்தார், மாநில நிர்வாகிகள், அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமீரகப் பிரமுகர்கள் வாழ்த்து
எம். அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்ட செய்தியறிந்து அமீரகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது மகிழ்ச்சியினையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்கா காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் தோப்புத்துறை முஹம்மது நூர்தீன், குவைத் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் டாக்டர் அன்வர் பாஷா, சவுதி அரேபிய காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்