
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி!
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான்MP சுமார் 1,05,393 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹம்துலில்லாஹ் )
மொத்த வாக்களார்கள் : 7,23,529
எம். அப்துல் ரஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற வாக்குகள் 3,60,474
அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 2,53,081
சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் எம். அப்துல் ரஹ்மான்.
வேலூர் தொகுதியில் முன்பு இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் -
காட்பாடி,
குடியாத்தம்,
பேரணாம்பட்டு (தனி),
ஆணைக்கட்டு,
வேலூர்,
ஆரணி.
தற்போதைய தொகுதிகள்: -
வேலூர்,
அனைக்கட்டு,
கீழவைத்தான்குப்பம் (தனி),
குடியாத்தம் (தனி),
வாணியம்பாடி,
ஆம்பூர்.
கடந்த தேர்தலி்லும் முஸ்லிம் லீக் வேட்பாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இத்தொகுதியில் வென்றார்.
கடந்த தேர்தல் நிலவரம்:-
காதர் மொஹைதீன் (முஸ்லிம் லீக்) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வெற்றி வித்தியாசம் - 1,78,610 வாக்குகள்.
இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்:-
1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்.
1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரஸ்.
1962 - அப்துல் வாஹித் - காங்கிரஸ்.
1967 - குசேலர் - திமுக.
1971 - உலகநம்பி - திமுக.
1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது -முஸ்லிம் லீக்
1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக.
1989 - ஏ.கே.ஏ.அப்துல் சமது - முஸ்லிம் லீக்
1991 - அக்பர் பாஷா - காங்கிரஸ்.
1996 - பி.சண்முகம் - திமுக.
1998 - என்.டி.சண்முகம் - பாமக.
1999 - என்.டி.சண்முகம் - பாமக.
2004 - காதர் மொஹைதீன் முஸ்லிம் லீக்
முதல் தேர்தல் நடந்த ஆண்டு - 1951:-
வென்றவர் - ராமச்சந்தர் (சிடபிள்யூஎல்)
வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றியினைத் தெரித்துக் கொள்கிறோம்..!
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
செய்தி: முதுவை ஹிதாயத்
++++++++++++++++++++++++++++++++++++++
அதிரை Post தலையங்கம்!
மத்திய அமைச்சர் எம்.அப்துல் ரஹ்மான் MP;
சமுதாயத்திற்கு அவசர வேண்டுகோள்!
வெற்றிப்பெற்ற எம். அப்துல் ரஹ்மான்MP அவர்கள் சிறந்த பொருளாதார மேதை;
துபை இஸ்லாமிய வங்கியில், தலைமைப் பொருப்பில் சிறந்த முறையில் பணியாற்றி வந்தார்.
தேர்தலை முன்னிட்டே தனது பதவியை ராஜினாமா செய்தார்கள். ஆனால், துபை இஸ்லாமிய வங்கி ராஜினாமாவை ஏற்க மறுத்தது!
ஆனாலும் தான் பிறந்த நாட்டிற்கும் சமூதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என தனது நிலையை விளக்கியப்பின்பே ஏற்றது.
தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,உருது உள்ளிட்ட மொழிகளில் நன்கு தேர்ச்சிப் பெற்ற அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம், உலக பொருளாதாரம் மந்தமாகியுள்ள சூல் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுவார் என்பது தின்னம்!
மீண்டும் தலைமை அமைச்சராக பொறுப்பேர்க உள்ள உலக பொருளாதார மேதை மன்மோகன் சிங் அவர்களும்,
நரபலிக் கும்பலை வீட்டுக்கு அனுப்பிய அன்னை சோனியாவும்,
முத்தமிழ் அரிஞர் கலைஞர் அவர்களும் ஆவண செய்யவேண்டும்.
அதுப்போல், தலைமை அமைச்சர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்புடைய முனீருல் மில்லத் பேராசியர் கே. எம். காதர்முகைதீன் அவர்களும் எம். அப்துல் ரஹ்மான்MPஅவர்களின் திறமைமைகளை தலைமை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!
அதுப்போலவே, சமுதாயப்பிரமுகர்களும் தங்களது ஆதரவு கருத்தினை வெளியிட வேண்டும்!
இன்னும்,
சமுதாய சங்கங்கள்,
ஜமாஅத்துக்கள்,
சேவை அமைப்புகள்,
கழகங்கள்,
இயக்கங்கள் ,
முஸ்லிம் லீக் கிளைகள்
அனைத்தும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்!
நல்ல வாய்பை விட வேண்டாமே!!
-அபு ஜுலைஹா-
தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!
நிச்சயமாக மந்திரி பதவிக்கு சரியானவர் திரு,அப்தூல் ரஹ்மான் அவர்கள். கண்டிப்பாக கலைஞர் ஆவன செய்வார் என நம்புவோம்.
பதிலளிநீக்குநன்றாக எழுதுகிறீர்கள் ஆனால் தடங்கல் ஏற்படுத்துவது எழுத்துப் பிழைகள். முயற்சி செய்து களைய முற்படவும்.
பதிலளிநீக்கு