அல்லாஹ்வின் தூதரின் அமுத மொழி! ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம்)
அருமையான பதிவு சகோதரரே! மக்காவில் இருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்ததும், முஹாஜிரீன் ஒருவரையும், அன்சாரி ஒருவரையும் சகோதரராக நாயகம்(ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவர்கள் எந்த அளவுக்கு சகோதரத்துவம் பேணினார்கள் என்றால், இரு மனைவியர் இருந்தால், அதில் ஒருவரை தலாக் செய்து தன் இஸ்லாமிய சகோதரருக்கு நிக்காஹ் செய்து வைக்கவும் தயாராக இருந்தார்.
பதிலளிநீக்குபழைய பதிவுகளை படிக்க முடியவில்லை. அதனால் தாங்கள் பதிவிடும் முறையில் மாற்றம் தேவை. ப்ளாக் ஆர்ச்சீவாவது போடுங்கள்.
பதிலளிநீக்கு