Breaking News
recent

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கை, 25.07.2009 சனிக்கிழமை இலங்கையின் கல் (Diamond) வர்த்தகத்தில் சிறந்து விளங்குவது பேருவலை நகரம்.

இங்குள்ள மஹகோட பகுதியில் உள்ள மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளி பிரசித்தி பெற்றதாகும். நேற்று 24.07.2009 இரவு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் திரண்டு வந்து மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியை தாக்கி சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்களை ஓடஓட விரட்டியடித்து ஆயதங்களால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் சகோ.மாஹின் உள்ளிட்ட இருவர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். மேலுர் ஐவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும் காடையர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை தீ வைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் இவர்கள் தீவைத்த காரணத்தினால் அங்கிருந்த புனித திருமறைகளும் (குர்ஆன்) மார்க்க விளக்க புத்தகங்களும் பெரும் எண்ணிக்கையில் எரிந்து சாம்பலாகி உள்ளன.

பள்ளிக்கு எதிரில் இருந்த மருந்தகம் (Pharmacy) ஒன்றும் கூட இவ்வன்முறையாளர்களால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தர்ஹா டவுன் என்று அழைக்கப்படும் இங்கு, நேற்று புஹாரி கந்தூரி வைபவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வன்முறையைத் தொடர்ந்து நாளை 26.07.2009 இப்பள்ளியில் நடைபெற இருந்த மார்க்க நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் மௌலவி முபாரக் மதனி, மௌலவி இஸ்மாயில் ஸலபி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் கோவை ஐயூப் ஆகியோர் உரையாற்ற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது செய்தியாளர்
பேருவலையிலிருந்து இம்தியாஸ்
நன்றி : இஸ்லாமிய தஃவா டாட் காம்
முகவைத்தமிழன்

முகவைத்தமிழன்

2 கருத்துகள்:

  1. தயவு செய்து செய்திகளைப் பிரசுரிக்கும் போது பக்கச் சார்பின்றி வெளியிடுங்கள். இந்தப் பிரச்சினையின் பின்னணி என்ன என்பதையாவது நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே. அந்த நிகள்வை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இஸ்லாமியர்கள் ஒரு போதும் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. அதே நேரம் ஒரு குழுவினர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, விபரீதம் நடந்த பிறகு அவர்களை காடையர்கள் என்று சித்தரிப்பது உங்களுக்கு எப்படி நியாயமாகப் பட்டது என்பது எனக்கு ஆச்சரிமாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. உண்மை நிலை என்ன ..என்ன தான் நடந்தது ..
    தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.