டெல்லி: தொய்வடைந்து போயுள்ள பாஜகவினரை தட்டி எழுப்பவும், கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டவும், மீண்டும் யாத்திரையை கையில் எடுக்கிறார் அத்வானி. செப்டம்பர் 15ம் தேதி முதல் அவர் நாடு தழுவிய யாத்திரையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அத்வானிக்கு நெருக்கமான ஒரு தலைவர் கூறுகையில், செப்டம்பர் 15ம் தேதி முதல் அத்வானி தனது யாத்திரையைத் தொடங்குவார். ஜம்மு அல்லது கேரளாவில் இந்த யாத்திரை தொடங்கும்.
விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்ச்சல் பிரதேச மாநிலங்களிலும் யாத்திரை நடைபெறும் என்றார்.
81 வயதாகும் அத்வானி கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் சென்று தொண்டர்களைச் சந்திக்கப் போகிறேன். லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வியுற்றது குறித்து அவர்களிடம் விளக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார்.
அப்போது அவர் கூறுகையில், தேர்தல் தோல்வி குறித்து தொண்டர்களிடம் நான் விளக்கியாக வேண்டும். அதற்காக தேசம் தழுவிய பயணத்தை மேற்கொள்ளப் போகிறேன். அனைத்து மாநிலங்களுக்கும் நான் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். பெரிய மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு நான் செல்வேன் என்று கூறியிருந்தார்.
உண்மையில், இந்த தேசம் தழுவிய பயணம் ஜூலை மாதத்திலேயே தொடங்கியிருக்கும். ஆனால் பாஜகவுக்குள் பெரும் பூகம்பம் வெடித்ததால் அத்வானியால் டெல்லியை விட்டு நகர முடியவில்லை.
தற்போது ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலையீட்டைத் தொடர்ந்து பிரச்சினைக்கு தீர்வு காணும் பார்முலா எட்டப்பட்டுள்ளதால், தனது யாத்திரையை அத்வானி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முன்பு யாத்திரை நடத்தினால் பொதுக் கூட்டங்களில் பேசுவார் அத்வானி. ஆனால் இந்த முறை அப்படிச் செய்யாமல், தான் போகும் இடம் எல்லாம் பாஜக தொண்டர்களிடையே பேசப் போகிறார். கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை அவர் விளக்குவதோடு, தான் போகும் பகுதியில் கட்சி தோற்க என்ன காரணம் என்பதையும் அவர் ஆராயவுள்ளார்.
நாட்டின் 2வது பெரிய கட்சியாக தொடர்ந்து பாஜகவே இருப்பதையும் அவர் தொண்டர்களிடம் விளக்கப் போகிறார்.
மேலும் பெருமளவிலான இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியத்தையும் அவர் தான் போகும் இடங்களிலெல்லாம் வலியுறுத்தப் போகிறார்.
அத்வானி இதற்கு முன்பு மேற்கொண்ட யாத்திரைகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1990ல் மேற்கொண்ட யாத்திரையின் மூலம், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்டம் கண்டது என்பது நினைவிருக்கலாம்.
முன்பு ர(த்)தம் குடித்த யாத்திரை மீண்டும்?....மைனாரிட்டிகளின் ரத்தம் குடித்து நாடெல்ல்லாம் இடுகாடாக்கிய ரத யாத்திரை போல் மீண்டும் மனித ரத்தம்,உயிர் குடிக்க இந்த டிராகுலா ஊரெல்லாம் உலா வரப்போகுது என்னும் பொழுதே எத்தனை உயிர் பறிபோகுமோ எனும் பயம் ஏற்படுகிறது.அரசு சட்டம் ஒழுங்கு நடவடிக்"கை"எடுக்குமா அல்லது ரத்த குளத்தில் தாமரை மிதக்குமா?
crown.
crown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்