Breaking News
recent

'நோ'பல் பரிசு இந்தியர்களுக்கு குதிரை கொம்பா?

.வெங்கடராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றது இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமைதான். ஆனால் உண்மையிலேயே இந்த பரிசால்இந்தியா பெருமைப்படும்சூழ்நிலையில் இருக்கிறதா?அறிவியல் துறையில் இந்தியர் களுக்கு நான்கு நோபல் பரிசுகள் இதுவரை கிடைத்திருக்கின்றன. சர் சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர், கொரானா மற்றும் ராமகிருஷ்ணன். இவர்களில்ராமனைத் தவிர, மற்றமூவரும் நோபல் பரிசு பெறும் போது, அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தனர்
.அறிவியல் துறையில் இந்தியாவில் படித்து, இந்தியாவில்பணிபுரிந்து நோபல் பரிசைப் பெற முடியாதா என்ற கேள்வி இதனால் எழுகிறது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, இந்தியாவிலேயே உருவான ஒரு விஞ்ஞானி கூட நோபல் பரிசைப் பெறவில்லை என்பது, வருத்தத்துக்குரியது.
தந்திரம் பெற்ற போது,அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கிவிடக்கூடாது என்றுஜவகர்லால் நேரு கருதினார்.இதனாலேயே அவர் அறிவியல் தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களை உருவாக் கினார்.
ஐ.ஐ.டி.,களை உருவாக்கினார்.""இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் சர்வதேச அளவுக்கு ஆய்வு செய்யும் வசதிகள் இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது,'' என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஓர் விஞ்ஞானி. நாம் சந்திரயான் ஏவினோமே, அணுசக்தி கப்பலை கட்டினோமே... இவையெல்லாம் இந்தியாவின் சாதனைகள்தானே என்று நாம் பெருமைப்படலாம். இவையெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாடுகள். ஆனால் அடிப்படையான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அது சமுதாயத்துக்கு எந்த அளவில் பயன்படப் போகிறது என்ற அடிப்படையில்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்படும்
ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பெரும்பாலானவை வெளியிடும் ஆய்வாளரின் சொந்த மற்றும்அவரது தொழில் ரீதியான வளர்ச்சிக்கே கவனம் செலுத்தப்படுகிறது. தீவிர நலன் கருதும் உண்மையான உழைப்பைநாம் அரிதாகவே பெறுகிறோம். ஆகவே நம் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி வெளியாகும் வெளிநாட்டு ஆய் வுக்கட்டுரைகள் மிகக்குறைவே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பொதுவாக இந்தியாவில்அறிவியல் வளர்ச்சி குறைவதற்கு இரு காரணங்கள்.
ஒன்று அடிப் படை ஆராய்ச்சிக்கான ஒட்டுமொத்த வசதி குறைவு. இரண்டாவதாக, ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளக்குறைவு. இரண்டுமே நிதி தொடர் பானவையே.வசதியான குடும்பத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவுக்காக ஆராய்ச்சியை மேற்கொள்வது குறைவாக இருக்கிறது. வசதி குறைந்த விஞ்ஞானி தன்னை நிரூபிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கிறது. இதுதான் இன்றைய பிரச்னை. ஐ.ஐ.டி.,களில் பணிபுரியும் ஆசிரியரின் சம்பளத்தைவிட, அவரிடம் படித்து வெளியேறும் மாணவர்கள் வெளிநாடுகளில் பலமடங்கு சம்பளம் பெறும் வாய்ப் புள்ளது.
இதே நிலைதான் ஐ.ஐ.எம்., நிறுவனங்களிலும்.அமெரிக்காவில் பணிபுரியும் சேதுராமன் கூறிய போது,""புத்திசாலிகளுக்கும் திறமையானவர்களுக்கும் இந்தியாவில்மதிப்பு குறைவு என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் அவர்கள் தங்களுக்கு எங்கு மரியாதை கிடைக்கிறதோ, தங்களுடைய ஆர்வத்துக்கு தீனி கிடைக்கிறதோஅந்த நாட்டை நோக்கி

செல்கிறார்கள்,'' என்றார்.இந்த ஆண்டு அறிவியல் ஆராய்ச்சியை துவங்கி அடுத்த ஆண்டு நோபல் பரிசு பெற்று விட முடியாது. அறிவியல் ஆராய்ச்சியின் நோக்கம் நோபல் பரிசாக மட்டும் இருக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் பயன்படக்கூடிய, பரந்த அளவிலான, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய, உடனடியாக பலன் தரும் என்று எதிர்பார்க்க முடியாத பிரச்னைதான் ஆராய்ச்சிக்கு இந்தியா லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொட்டுவதற்கு தயாராக இல்லை. "நோபல் பரிசு கமிட்டி எப்போதும் சரியான நபருக்கு நோபல் பரிசை அளித்ததில்லை.
மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்கவேயில்லை' என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியர்களுக்கு நோபல் கமிட்டியில் ஆதரவில்லை என்கிறோம்.அதேசமயம் அறிவியலில் நோபலுக்கு தகுதியான இந்தியர் இவர் என்று யாருமே கைகாட்டும் அளவுக்கு ஒரு சிலரே வளர்ந்திருக்கிறார்கள் ஆனால் வளர்ந்த நாடுகளில் ஒரு ஆய்வுக் கூடத்தில் சராசரியாக 2-3 விஞ்ஞானிகள் நோபல் தகுதியுடன் இருக்கிறார்கள். வறுமை ஒழிப்புத் திட்டங்கள், பாதுகாப்பு செலவு என்று அரசின் கவனம் வேறு திசையில் திரும்பியிருக்கிறது.
அறிவியல் ஆராய்ச்சி செலவில் இன்னும் அரசு முழுக் கவனம் செலுத்தவில்லை. "ராமகிருஷ்ணன் இந்தியாவுக்கு அடிக் கடி வர வேண்டும்' என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். ராமகிருஷ்ணனை வரவழைப்பதால் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கலாம். ஆனால், அந்த ஆர்வத்தால் வளர்ந்த அறிவை இந்தியா தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால், அறிவியல் பற்றிய அரசியல்வாதிகளின் மனப்பாங்கு மாற வேண்டும்
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.