மணவழகனுக்கு குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர் விருது‘!


மத்திய அரசின் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர் விருது‘ (Young scholar Award) காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ. மணவழகனுக்கு வழங்கப்படவுள்ளது.

இவர் பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005), சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007), தொலைநோக்கு (2008), பழந்தமிழர் தொழில்நுட்பம் (2008) ஆகிய நூல்களையும்

தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான கருத்தரங்குகளில் 35 ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்பித்துள்ளார்.

சங்க இலக்கிய காட்சிகள், தமிழ் மொழிக் கையேடு, தமிழர் பழக்க வழக்கங்களில் அறிவியல் சிந்தனைகள் உள்பட 8 தலைப்புகளில் கணினித்தமிழ் குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தரான மணவழகனின் பெற்றோர் ஆறுமுகம்- பெரியக்காள் ஆவர்.

ஆத்தூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ, திருச்சி தேசியக் கல்லூரியில் எம்.ஏ. படித்துவிட்டு, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிஎச.டி பெற்றுள்ளார் மணவழகன்.

மணவழகனின் மின் முகவரி: tamilmano77@yahoo.com

இளம் அறிஞர் முனைவர் ஆ. மணவழகனுக்கு அதிரை போஸ்டின் வாழ்த்துக்கள்!
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.