ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைக்கு, அமெரிக்காவின் நிதி உதவி இன்னும் 20 ஆண்டுகளுக்குத் தேவை என்று அதிபர் ஹமித் கர்சாய் கூறியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்துள்ளார்.
அவர் இன்று அதிபர் கர்சாயை சந்தித்து, ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் புதிய இராணுவ திட்டம் குறித்து விவாதித்தார்.அப்போது ராபர்ட் கேட்ஸிடம் மேற்கண்ட கோரிக்கையை விடுத்த கர்சாய், அமெரிக்காவின் நீண்ட கால உதவிக்கான உத்தரவாதத்தை கேட்டார்.
இன்னும் ஐந்தாண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை ஆப்கானிஸ்தான் படை முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும், ஆனால் அதற்கான முழுச் செலவினங்களுக்கும் தேவையான நிதியை அமெரிக்க அளிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதாகவும் கர்சாய் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.
PUTHIYATHENRAL
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்