சிகாகோ : அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷுக்கு மிரட்டல் விடுத்த இந்தியர் விக்ரம் புத்திக்கு, ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை முன்னாள் கேப்டன் சுப்பாராவின் மகன் விக்ரம் புத்தி(38). அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக் கழகத்தில் பி.எச்டி.,படித்து வந்தார். கடந்த 2006ம் ஆண்டு இன்டெர்நெட் மூலமாக அப்போதைய அதிபர் புஷ் மற்றும் துணை அதிபர் டிக்செனி மற்றும் அவர்களது மனைவிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அமெரிக்காவின் முக்கிய இடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும், எனவும் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்டியானா கோர்ட்டில் இந்த விசாரணை நடைபெற்று வந்தது. விக்ரம் சார்பில் ஆஜரான வக்கீல் திறமையாக வாதாடாததால், அவரை குறை கூறினார் விக்ரம். இரண்டாவது வக்கீல் மீதும் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
இதனால், இந்த வழக்கு விசாரணை தள்ளி போனது. இதற்கிடையே, கடந்த வாரம் கோர்ட்டில் ஆஜரான விக்ரம், தானே வாதாடினார். இருப்பினும், இன்டியானா கோர்ட் நீதிபதி ஜேம்ஸ் மூடி, இவருக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாத கால தண்டனையை உறுதிசெய்தார்.தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்கும் படி, விக்ரம் வாதாடினார். ஏற்கனவே விக்ரம் சிறையில் கழித்த தண்டனை காலம் இந்த தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை காலத்திலிருந்து கழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சிகாகோ கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய விக்ரம் திட்டமிட்டுள்ளார்.தண்டனை காலம் முடிந்து அவர் மூன்றாண்டு காலம் கண்காணிக்கப்படுவார். பின்னர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்.
AdiraiPost
இந்தியர் விக்ரம்
புஷ்ஷுக்கு மிரட்டல்
புஷ்ஷுக்கு மிரட்டல் :அமெரிக்காவில் கைது செய்யப்பட்டவர் ஹிந்து திவிரவாதியா?
crown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்