வீடியோ கேம் மூலம் உலகை மறக்கும் சிறுவர்கள்

அமெரிக்கா பாஸ்டன் நகரில் தூங்காமல் விடிய விடிய தன் மகன் வீடியோ கேம் விளையாடுவதால் எரிச்சலடைந்த தாய் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.

நள்ளிரவு தாண்டி மணி 2:30 ஆகியும் 14 வயது சிறுவன் வீடியோ கேம் விளையாடியவாறு இருந்துள்ளான். தவிர வீடு முழுதும் திரிந்தவனாக அனைத்து விளக்குகளையும் ஏற்றியுள்ளான். இதனால் மிகவும் கோபமும், எரிச்சலும் அடைந்த தாய் அவசர போலீஸை 911 எண்ணில் அழைத்துள்ளார்.

விரைந்து வந்த போலீஸார் தாயாருக்கு பணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இன்றைய காலக் கட்டத்தில் வீடியோ மற்றும் கம்ப்யூட்டரில் விளையாடும் விளையாட்டிற்கு சிறுவர்கள் அடிமையாகியுள்ளதில் இத்தகைய புகார்கள் ஆச்சரியமளிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி கருத்துத் தெரிவித்துள்ளார்
PUTHIYATHENRAL

PUTHIYATHENRAL

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.