Breaking News
recent

மெம்பர் இப்ராஹிம் அவர்களின் மறுப்பறிக்கையும் நமது கேள்வியும்!

"நன்பரே இன்று காலை சாப்பிட்டீர்களா?" என்று கேட்டால், "இதே தேதியில் சென்ற வருடம் இரவு சாப்பிடவில்லை" என அந்த நன்பர் கூறினால் அது சரியான பதிலா; விளக்கமாகுமா?
அப்படிதானிருக்கிறது சகோதரர் ஆப்பிள் இப்ராஹிம் அவர்களின் மறுப்பறிக்கை என்ற விளக்கம்(?)

1) 21வது வார்டுக்கு என்ன செய்தீர் சகோதரரே எனக்கேட்டால், 13வது வார்டில்(1996-2006) செய்த சாதனைகளைச் சொல்கிறார்!


2)14- 01- 10 அன்றைய தேதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் பற்றி அவர் விளக்கும் போது,10- 01- 10-ம் தேதியே சுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்றும் கூறுகிறார்.


3)மீண்டும் புகைப்படத்தை கிளிக் செய்து பாருங்கள் சகோதர, சகோதரிகளே!
அது 3நாட்களில் சேர்ந்த குப்பையா அல்லது நீண்ட காலமக முழுமையாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் குப்பையா என்று!


4)இன்னும் சொல்கிறார்...
"என்னால் 1ஆண்டுகள் முன் எடுக்கப்பட்ட" புகைப்படம் என்கிறார்.
உங்களால் உங்கள் கேமராவில் ஒரு வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் எப்படி எமது கேமராவில் 14- 01- 10 அன்று பதிவாகும்?
மாயாஜால பட கதையைவிடவும் மோசமான கற்பனை!


5)இன்னும் பல புகைப்படம் என்னுடைய 21வது வார்டே அல்ல; அது 19வது மற்றும் 13வது வார்டுகள் தான், அந்த குப்பைகளுக்கு நான் பொறுப்புல்ல.,
சகோதரி ஃபர்வீனும் சகோதரர் காதர் அவர்களும் தான் என்பது உங்கள் குற்றச்சாட்டு!


அதிரை வாசிகளே!
ஒரு முறை சிஎம்பி லேன் பகுதிக்கு சென்று அதிரை போஸ்ட் செய்தி உண்மையா அல்லது சகோதர் ஆப்பிள் இப்ராஹிம் அவர்களின் மறுப்பறிக்கை சரியா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்!
Unknown

Unknown

7 கருத்துகள்:

 1. கதை பேசுவதை விட,செயல் படுவதே நல்லது,இதுக்கே மக்கள் தெரிவு செய்தனர்.

  பதிலளிநீக்கு
 2. I cant enlarge the picture, its too small
  can u do some possible to enlarge the size?

  Thanks
  Cmp Guyz

  பதிலளிநீக்கு
 3. ஆக மொத்தத்துல சி.எம்.பி லைனுக்கு எப்ப விடிவுகாலம். மெம்பர் இபுறாகீம் நீங்கள் எப்போது ஃபோட்டோவுடன்" விளக்கம் கொடுக்கக் போறிங்க?

  பதிலளிநீக்கு
 4. விளக்கங்களை விட்டுவிட்டு(யாவரும்) செயலாற்ற இயலுமா என்று பாருங்கள்.

  நாங்களும் அங்கு குடி வந்து 10 வருடங்கள் ஆயிற்று - குப்பையற்று - கொசுவற்று - இருந்ததேயில்லை.

  இதுவரை போனது போகட்டும் இப்பொழுது முதல் எதுனா செய்ய முடியுமான்னு பாருங்க - நிச்சியமாக தாங்கள் செய்து முடித்து விட்டால் - பன் மடங்காக மக்களுக்கு எடுத்து செல்லுவோம் தங்கள் நற்பணியை.

  பதிலளிநீக்கு
 5. Mr. member Ebrahim, kindly note that garbage street cleanup activities to be carried out in a regular basis.
  Failing to take care of this issue will increase in number of (curent crisis) Chickungunya/viral fever patients in your ward.

  C.M.P resident

  பதிலளிநீக்கு
 6. அஸ்ஸலாமு அழைக்கும் ;தாங்கள் வெளியட்டுள்ள புகை படத்தை நன்றாக கவனித்தால் உங்களுடைய சுயவிளம்பர புத்தி வெட்ட வெளிச்சம் தெரியும் . 1. முதல் புகைபடம் எடுக்கப்பட்ட இடம் கண்ணாடி ஜமாலுதீன் காக்கா வீடு அருகே அதில் கிடக்கும் பொருட்கள் குப்பைகள? பழைய வீடு இடித்த செங்கர்கல! 2 . இரண்டாவது படம் மரைக்காயர் குளம் அருகிலுள்ள குப்பைகள் .இந்த இடம் 19வது வார்டை சேர்ந்தது. 3.இந்த புகைபடம்செட்டிய குளம் அருகில் உள்ளது .இந்த இடம் 13வது வார்டை சேர்ந்தது. 4.நான்காவது புகைப்படம் சோனி விட்டருகில் உள்ளது குப்பையை சுத்தம் செய்து கொளுத்திய சில மணித்துளிகளில் போட்ட தேங்காய் மட்டை. 5.இந்த புகைபடம் அப்பாஸ் ஹாஜியார் வீட்டின் பின்புறம் எடுத்தது. இந்த இடம் 19வது வார்டை சேர்ந்தது. 6. முதல் புகைபடம் எடுக்கப்பட்ட இடமும்ஆறாவது படம் எடுக்க பட்ட வெவ்வேறு கோணங்களில் எடுக்கபட்டதுதான் . 7 .ஏழாவது படம் சி.எம் .பி லைன் வாய்க்காலில் ஓடும் கழிவு நீர்.இதில் கலப்பது எல்லாம் அங்கே வசிக்கும் மக்களின் பயன் படுத்திய கழிவு நீர் அதற்காக யாரும் இதுவரை எந்த வித கவலை பட்டது கிடையாது.மெம்பெர் இப்ராகிம் மற்றும் சில சமுதாய ஆர்வலர்கள் கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர் (P W D ) யை சார்ந்தது. 8. இந்த படம் CMPமெடிக்கல் எதிரே உள்ள இடத்தில் சைக்கிள் கடை வைத்திருப்பவர் கூட்டிய காயிந்த இலைகள் அருகே நன்றாக கவனித்தால் அதற்கு முன்னால் சுத்தம் செய்தது தெரியும் . 9 . இந்த புகைபடத்தை நன்றாக கவனித்தால் சுத்தம் செயுது கொளுதியது தெரியும். நான்காவது புகைப்படம் இந்த படமும் ஒரே இடத்தில் எடுத்ததற்கு சாட்சி கிடக்கும் தேங்காய் மட்டை ! 10 .நமதூரில் எங்கேயும் பன்றிகளை பார்த்தது கிடையாதா ?ஒரு பன்றிகாக ராஜினாமா செய்ய வேண்டுமா ? அப்படியென்றால் 13 மற்றும் 14 வது மெம்பராக இருக்கிறவர்களை என்ன செய்ய சொல்லுவது. ஏன் என்றல் அங்கேதான் பன்றிகள் கூட்டுகுடும்பமாக வாழ்கின்றன ? இதை யாரும் மறுக்க முடியாத உண்மை!

  பதிலளிநீக்கு
 7. அஸ்ஸலாமு அழைக்கும் ;தாங்கள் வெளியட்டுள்ள புகை படத்தை நன்றாக கவனித்தால் உங்களுடைய சுயவிளம்பர புத்தி வெட்ட வெளிச்சம் தெரியும் . 1. முதல் புகைபடம் எடுக்கப்பட்ட இடம் கண்ணாடி ஜமாலுதீன் காக்கா வீடு அருகே அதில் கிடக்கும் பொருட்கள் குப்பைகள? பழைய வீடு இடித்த செங்கர்கல! 2 . இரண்டாவது படம் மரைக்காயர் குளம் அருகிலுள்ள குப்பைகள் .இந்த இடம் 19வது வார்டை சேர்ந்தது. 3.இந்த புகைபடம்செட்டிய குளம் அருகில் உள்ளது .இந்த இடம் 13வது வார்டை சேர்ந்தது. 4.நான்காவது புகைப்படம் சோனி விட்டருகில் உள்ளது குப்பையை சுத்தம் செய்து கொளுத்திய சில மணித்துளிகளில் போட்ட தேங்காய் மட்டை. 5.இந்த புகைபடம் அப்பாஸ் ஹாஜியார் வீட்டின் பின்புறம் எடுத்தது. இந்த இடம் 19வது வார்டை சேர்ந்தது. 6. முதல் புகைபடம் எடுக்கப்பட்ட இடமும்ஆறாவது படம் எடுக்க பட்ட வெவ்வேறு கோணங்களில் எடுக்கபட்டதுதான் . 7 .ஏழாவது படம் சி.எம் .பி லைன் வாய்க்காலில் ஓடும் கழிவு நீர்.இதில் கலப்பது எல்லாம் அங்கே வசிக்கும் மக்களின் பயன் படுத்திய கழிவு நீர் அதற்காக யாரும் இதுவரை எந்த வித கவலை பட்டது கிடையாது.மெம்பெர் இப்ராகிம் மற்றும் சில சமுதாய ஆர்வலர்கள் கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர் (P W D ) யை சார்ந்தது. 8. இந்த படம் CMPமெடிக்கல் எதிரே உள்ள இடத்தில் சைக்கிள் கடை வைத்திருப்பவர் கூட்டிய காயிந்த இலைகள் அருகே நன்றாக கவனித்தால் அதற்கு முன்னால் சுத்தம் செய்தது தெரியும் . 9 . இந்த புகைபடத்தை நன்றாக கவனித்தால் சுத்தம் செயுது கொளுதியது தெரியும். நான்காவது புகைப்படம் இந்த படமும் ஒரே இடத்தில் எடுத்ததற்கு சாட்சி கிடக்கும் தேங்காய் மட்டை ! 10 .நமதூரில் எங்கேயும் பன்றிகளை பார்த்தது கிடையாதா ?ஒரு பன்றிகாக ராஜினாமா செய்ய வேண்டுமா ? அப்படியென்றால் 13 மற்றும் 14 வது மெம்பராக இருக்கிறவர்களை என்ன செய்ய சொல்லுவது. ஏன் என்றல் அங்கேதான் பன்றிகள் கூட்டுகுடும்பமாக வாழ்கின்றன ? இதை யாரும் மறுக்க முடியாத உண்மை!

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.